நக்கீரன் :மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு கடந்த மே மாதம் நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடைவிதித்தது. விவசாயத்திற்காக மட்டுமே மாடுகளைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறிய மத்திய அரசு, மாடுகளை விற்பனை செய்ய பல்வேறு விதிமுறைகளையும் கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் தங்களது மாடுகளை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் உள்ளிட்ட பலர் அவதியுற்றனர்.
மேலும், பசு சேவகர்கள் என சொல்லப்படும் பசு குண்டர்கள், பசுவின் பெயரால் பல்வேறு தாக்குதல்களை நாடு முழுவதும் அரங்கேற்றினர். பலர் கொல்லப்பட்டனர். இது மத்திய அரசின் மீது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும், மேற்கு வங்காளம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாயிகளும் இந்த உத்தரவால் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், பல்வேறு எதிர்ப்பைச் சந்தித்திருக்கும் இந்த முடிவை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதுகுறித்த மறுபரிசீலனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக