ஞாயிறு, 26 நவம்பர், 2017

4 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை .. ஒரு மாணவி மட்டும் தப்பியது எப்படி?

ஒரு மாணவி மட்டும் கடைசி நிமிடத்தில் கிணற்றில் குதிக்காமல் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்கள்- வீடியோ வேலூர்: அரக்கோணம் அருகே உள்ள பணப்பாக்கம் அரசுப்பள்ளியில் படித்து வந்த மாணவிகள் மோனிஷா, தீபா, ரேவதி, சங்கரி ஆகியோர் நேற்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். மாணவிகள் நான்கு பேர் கூட்டாக தற்கொலை செய்து கொண்டது அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், மாணவிகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று பணப்பாக்கத்தில் கடையடைப்பு போராட்டம் நடந்துவருகிறது. பதற்றமான சூழ்நிலையால் அந்தப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் திட்டியதால் மாணவிகள் மரணத்திற்கான காரணம் குறித்த, முதற்கட்ட விசாரணையில் மாணவிகள் ஏன் தற்கொலை செய்துகொண்டனர் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் நடந்த பருவத் தேர்வுகளில் மாணவிகள் மோனிஷா, தீபா, ரேவதி, சங்கரி உள்ளிட்ட சில 11ம் வகுப்பு மாணவிகள் குறைவான மதிப்பெண்கள் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இதனால் ஆசிரியர்கள் மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து வரச் சொல்லி திட்டி இருக்கிறார்கள். 
மனமுடைந்த மாணவிகள் ஆனால், மாணவிகள் பள்ளிக்கு பெற்றோர்களை அழைத்து வராததால், பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமாமணி உள்ளிட்ட ஆசிரியர்கள் சிலர் மாணவிகளை மற்ற மாணவர்கள் முன் திட்டி, வகுப்பிற்கு வெளியே நிற்க வைத்ததாகத் தெரிகிறது. மற்ற மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டதால் மனமுடைந்த மாணவிகள் மோனிஷா, ரேவதி,தீபா, சங்கரி உள்ளிட்ட ஆறு பேர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். 
ஐந்து பேர் திட்டம் இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், தற்கொலை செய்யப்போனது 4 மாணவிகள் மட்டும் கிடையாதாம். ஐந்தாவதாக ஒரு மாணவியும் அதில் இருந்துள்ளார். ஆனால் தற்கொலை செய்ய தைரியமின்றி 5 பேரும் வெகுநேரம் கிணற்றுக்கு அருகே இருந்து பேசியபடி இருந்துள்ளனர். 
ஒருவருக்கொருவர் மனரீதியாக தயாரான பிறகே கிணற்றில் குதிக்கப்போயுள்ளனர். ஒரு மாணவி தப்பினார் இப்படி ஐந்து பேரும் கைகோர்த்துக் கொண்டு, குதிக்கப்போன நேரத்தில் ஒரு மாணவி மட்டும் பயத்தில் ஓடிவந்துவிட்டார். மற்ற 4 மாணவிகளும் குதித்துவிட்டனர். 
பள்ளிக்கு சென்ற மாணவி உடனடியாக அதுகுறித்து ஆசிரியர்களிடம் சொல்லவில்லை. உடம்பு சரியில்லை என்று காரணம் கூறிவிட்டு அமைதியாக இருந்துள்ளார். ஆனால் ஆசிரியர்கள் சந்தேகப்பட்டு துருவி துருவி கேட்டபோது உண்மையை சொல்லியுள்ளார். காப்பாற்ற வாய்ப்பு காப்பாற்ற வாய்ப்பு இதன்பிறகே கிணற்று பகுதிக்கு ஆசிரியர்கள் விரைந்துள்ளனர். ஒருவேளை அந்த மாணவி சற்று முன்னதாக தகவல் கொடுத்திருந்தால், 4 மாணவிகளை காப்பாற்ற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

/tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக