புதன், 22 நவம்பர், 2017

நீதி கட்சியை எதிர்த்த பாரதி ... கமல்தான் தமிழனின் அடையாளமா?

ராஜா ஜி : பாரதி யார்? அவர் நீதிக்கட்சியை எதிர்த்த காரணம் என்ன? யாருக்கான பிரதிநிதி இந்த பாரதி?
1916 ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் நாள் தியாகராயர், பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கையை வெளியிடுகிறார்.
நீதிகட்சிக்கு டாக்டர் டி.எம். நாயர் குறிக்கோள்களை உருவாக்கினார்.
அவற்றில் முக்கியமான இரண்டு;

1. தென்னிந்தியாவில் உள்ள பார்ப்பனரல்லா சமூதாயங்கள் ஒவ்வொன்றிலும் கல்வி, சமூகவியல், பொருளியல், அரசியல், அறவாழ்வு ஆகிய துறைகளில் முன்னேற்றமடையச் செய்தல்.
2. தென்னிந்தியாவில் உள்ள பார்ப்பனரல்லா சமுதாயங்கள் எல்லாவற்றின் விருப்பங்களையும் நிறைவேற்றவும், பாதுகாக்கவும் அவர்களின் கருத்துக்களையும் விருப்பங்கள¬யும் அறிந்து ஆராயந்து - அரசாங்கத்திற்கு உண்மையானவையாகவும் தக்க சமயத்திலும் கருத்துக்களை அளிப்பதற்காகப் பொதுச் சிக்கல்களை ஆய்தல்.
இதோ பாரதிக்கு வந்தது கோவம், ஆண்டாண்டு கால தர்மத்தை மீறும் நீதிக்கட்சியை திட்டி பக்க பக்கமாக எழுதினார்.

ஆணி வேரை அசைத்ததும் மரம் ஆடியது. இந்த பாரதிதான் தமிழரின் அடையாளமா?
இன்று பாரதியை அடையாளப்படுத்தும் கமல்தான் தமிழனின் அடையாளமா?
சிந்திப்போம்.

2 : பிராமண’ தர்மம் என்ன வென்றால்,
¨அவன், உடலுழைத்து பாடுபடக் கூடாது.
¨அவன், மற்றவர்களிடம் வேலை வாங்கலாம்.
¨அவன், ஏர் உழுதால் பாவம்!
¨அவன், மற்றவர்கள் உழைப்பால் உயிர் வாழலாம்!
¨அவன், விபசாரம் செய்தால், விபசாரத்திற்கு உள்ளான பெண் ணுக்கு மோட்சம்!
¨அவன், பலாத்கார புணர்ச்சி செய்தால், ஊரை விட்டு வெளி யேற்றலாம்.
¨அவன் கொலை செய்தால், அவ னுக்கு மொட்டை அடித்தாலே போதுமான தண்டனை!
¨அவன், திருடினாலும், அவன் சொத்துக்களை அவன் எடுத்துக் கொண்டதாகுமே தவிர, பிறர் பொருளை களவாடினதாகாது.
¨அவன் சொத்துடையவனிடமி ருந்து பலாத்காரமாகப் பிடுங்கிக் கொள்ளலாம்.
--அவன், மது வருந்தலாம்; மாட்டு மாமிசம் சாப்பிடலாம், சூது ஆடலாம், தன் நலத்திற்குப் பொய் பேசலாம்! இவை குற்றமாகாது!
¨அவன் என்ன செய்தாலும் அரசன் அவனை தண்டிக்கவே கூடாது.
இன்னோரன்ன மற்றும் இது போன்ற பல சலுகைகள், வசதிகள், உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக