புதன், 22 நவம்பர், 2017

நடிகர் அஜீத்தை மிரட்டியதும் அன்பு செழியன்தான் - இயக்குனர் சுசீந்தரன் பரபரப்பு பேட்டி

வெப்துனியா :நடிகர் அஜீத்தை மிரட்டியது கந்து வட்டி அன்பு செழியன்தான் என இயக்குனர் சுசீந்திரன் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமாரின் உறவினரும், அவரின் மேனேஜருமான அசோக்குமார் என்பவர் நேற்று மாலை திடீரெனெ துக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.">கந்து வட்டி கடன் கொடுக்கும் சினிமா பைனான்சியர் அன்பு செழியனிடம் வாங்கிய ரூ.18 கோடி கடனுக்கு, 18 கோடி வட்டியாக கொடுத்த பின்பும், மீண்டும் மீண்டும் பணம் கேட்டு அவர் சசிகுமாருக்கு மன உளைச்சலை தருவதால், அதை தடுக்க முடியாமல் தான் தற்கொலை செய்வதாக அவர் கடிதத்தில் எழுதி வைத்துள்ளார்.
இந்த விவகாரம் தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் அமீர் உள்பட பலரும் அன்புவிற்கு எதிராக கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும், அன்பு செழியன் மீது போலீசார் கொலை வழக்குபதிவு செய்து, தலைமைறைவான அவரை தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக