ஞாயிறு, 5 நவம்பர், 2017

ஆளுங்கட்சி பாஜக ... எதிர்கட்சி கமலஹாசன் ,,, இதுதான் பார்ப்பனீயம் ! எங்கும் அவாளே ,,,

Aalanci Spm : ஐம்பது ஆண்டுகளாக நாம் தூங்கிக் கொண்டிருந்தோம். ..கமல்
இல்லை கமல் அவர்களே
ஐம்பது ஆண்டுகளாக உங்கள் பூணூலை மறைத்துக் கொண்டிருந்தீர்கள்.. ஆனாலும் அதையெல்லாம் மீறி அடிக்கடி எட்டிபார்க்கும் என்பதை நாங்கள் அறிவோம்.. ..
கொஞ்சம் கவனித்தால் புரியும் இதுவரை கமல் பாஜகவை விமர்சிக்கவே இல்லை .. ஆனால் பகுத்தறிவு வேடம் கட்டி நம்மை விமர்சிப்பார். விமர்சனம் செய்யட்டும் அதில் காரியமாக ஏதேனும் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.. ஐம்பதாண்டுகள் என யாரையெல்லாம் சொல்கிறார் ..
அண்ணா கலைஞர் மகோரா ஜெயா ஆட்சி .. நாங்களே மகோரா ஜெயா ஆட்சியை திராவிடத்தின் ஆட்சியாக கருதியதில்லை திராவிட போர்வையில் ஏறக்குறை பாசிச கைகூலிகளின் ஆட்சி அது .. இங்கே நேரடியாக வலம் வரமுடியாதென்பதால் திராவிட போர்வையில் ஆட்சி செய்தார்கள் அதனால் மயிலு குயிலென்றென்லாம் பெயர் சூட்டி மத்தியில் ஆள்வோரை/அதிகாரிகளை குளிர்வித்து ஆட்சி செய்தார் .. ஜெயாவோ நேரடியாகவே இந்துத்துத்துவவாதிகளை செயல்படவிட்டார் கடைசி காலங்களில் அவர்களாலேயே மிரட்டலுக்கும் ஆளானார்.


..
அண்ணா.. கலைஞர் இருவரின் ஆட்சியில் இன்று காண்கிற நல்ல திட்டங்கள் காலம் கடந்தும் பயனளிக்கிற திட்டங்கள் .. ஒடுக்கபட்டிருந்த சமூகத்திலிருந்தவர்களை கை கொடுத்து மேலிழுத்து அவர்களை சரிசமாக நடமாடவிட்டது..
ஆண்டே சாமி என்றழைத்தவைனை .. யோவ் அய்யரே என அழைக்க காரணமானவர்கள் பெரியாரும் அண்ணாவும் தான் .. இன்றைக்கு நாங்களெல்லாம் உம்மை போன்றவரை எதிர்த்துநின்று கதைக்கிறோமே அதெல்லாம் பெரியாரும் அண்ணாவும் கற்று தந்ததுதான்..
ஏன் என கேட்க வைத்ததும் திராவிடம் தான். நூற்றாண்டாய் எங்களை பழக்கி பழக்கி..திருந்துடா திருந்துடா என பெரியார் எங்களை திட்டி திட்டியே சொரணையை வரவைத்து .. இனி எக்காலத்திலும் பாசிசத்தை காலூன்ற வைக்காமல் பார்த்துக்கொள்ள பழக்கியிருக்கிறார்கள்.. அதனால்தான் சின்ன சின்ன அசைவுகளை கூட எங்களால் இனம்காண முடிகிறது..
..
கமல் அவர்களே .. உங்கள் நடிப்பை ரசிக்கிறவன் என்பதற்காக தமிழனை மதிமயக்கத்திலேயே வைத்திருக்கலாமென்ற எண்ணம் இனி ஈடேறாது எழுபதுகளில் நடந்த தவறுகள் இனியும் இங்கே நடக்காதென்பதை காலம் உணர்த்தும்
..
கட்சி நடத்த நிதியை ரசிகர்கள் தருவார்கள் மிக கவனமாக காசை எடுக்காமல் அடுத்தவன் தலையை தடவுகிறீர்.. கொள்கைக்காக கட்சி தொடங்கினால் தாமாக முன் வருவார்கள். வெறும் டீயும் பண்னையும் தின்றுவிட்டு கட்சி பணியாற்றுவான் .. ரசிகன் தருவான் என்கிற போதே முதலீடு செய்ய சொல்வது புரிகிறது..
முதலில் எதேனும் ஒன்றில் தெளிவாக நில்லுங்கள்..
மிக தெளிவாக சிந்திக்கிற மக்கள் .. தனிகட்சி தொடங்குவதாக சொல்வது கல்லைக்கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் இறங்குவதைப்போல.. விரைந்து இறங்குங்கள்
பாஜகவை விமர்சிக்காமல் அங்கொரு காலும் இங்கொருகாலும் வைக்காமல் ஒரே இடத்தில் நிற்க பழகுங்கள்.. தீவிரவாதம் வேறு பயங்கரவாதம் வேறு .. இருபக்கம் அடிவாங்க நானென்ன மத்தளமா.. என்கிறீர் அதைதான் சொல்கிறோம்
ஏன் சங்கடபடவேண்டும்.. கறுப்புச்ச்டை போர்வில் காவி சிந்தனையோடு திரியவேண்டும் நேரடியாக பாஜகவில் சேர்ந்து எதிர்நின்று போராட வா.. மறைந்துநின்று தாக்கும் ராமசந்திரன் பரம்பரையே.. நேர் வா..
..
இல்லையெனில் வாய்மூடி போ..
..
Aalanci Spm
Mansoor Mohammed..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக