செவ்வாய், 7 நவம்பர், 2017

ஆசிரியரின் தூக்கத்தைக் கலைத்த மாணவனின் கை உடைப்பு!

minnambalam.com/ :ஆசிரியரின் தூக்கத்தைக் கலைத்த மாணவனின் கை உடைப்பு! உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியரின் தூக்கத்தைக் கலைத்த இரண்டாம் வகுப்பு மாணவனின் கையை ஆசிரியர் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த அபய் என்ற சிறுவன் இரண்டாம் வகுப்பு படித்துவருகிறான். அவனுடைய வகுப்பறையில் ஆசிரியர் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, மாணவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். சில மாணவர்கள் அங்கேயும் இங்கேயும் ஓடி விளையாடிக்கொண்டிருந்தனர். மாணவர்கள் போடும் சத்தத்தால் தூக்கத்திலிருந்து எழுந்த ஆசிரியர் நின்றுகொண்டிருந்த அபயைக் குச்சியால் பலமுறை தாக்கியுள்ளார். அடி தாங்க முடியாமல் மாணவன் தன் கையைப் பிடித்தபடியே கீழே விழுந்தான். மாணவன் நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்ததால், அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாணவனை அழைத்துச் சென்றனர். மாணவனைப் பரிசோதித்த மருத்துவர் மாணவனின் கையில் முறிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதையடுத்து, மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். ஆசிரியரைக் கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக