செவ்வாய், 7 நவம்பர், 2017

மன்மோகன் சிங்: பணமதிப்பு இழப்பால் சீனாவுக்குத்தான் இலாபம் ! வெறும் 9 நிமிடத்தில் பண மதிப்பிழப்பு முடிவுக்கு வந்த மோடி...


Mohan Prabhaharan Oneindia Tamil : வெறும் 9 நிமிடத்தில் பண மதிப்பிழப்பு முடிவுக்கு வந்த மோடி... அகமதாபாத்: பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவிற்குள் சீனப்பொருட்களின் வரத்து அதிகரித்து இருக்கிறது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டு உள்ளார். மோடியின் பா.ஜ.க அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி திடீரென 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்த திடீர் அறிவிப்பால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். கள்ளநோட்டுகளும் ,பெரு முதலாளிகளிடம் இருக்கும் கருப்புப் பணத்தையும் ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு மக்கள் சிரமம் பார்க்காது ஆதரவு அளிக்கவேண்டும் என்று மோடி மக்களிடம் கேட்டுக்கொண்டார். இந்த அறிவிப்பால் ஒரே நள்ளிரவில் 15 லட்சம் கோடி பணம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.


புள்ளி விவரங்கள் பொருளாதார நடவடிக்கைகளில் முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டாலும், இது தோல்வியிலேயே முடிந்துள்ளதாக பொருளாதார புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் மட்டுமில்லாது சிறு மற்றும் குறு வியாபாரிகள் அதிக அளவு பாதிக்கப்பட்டனர். தற்போதுவரை அவர்களின் நிலை மிகவும் மோசமாகவே இருக்கிறது.

கருப்பு தினம் இந்நிலையில், அரசு இந்த நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஓராண்டு வெற்றி விழாவாகக் கொண்டாட இருக்கிறது. அதே சமயம் எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் கருப்பு தினமாக கடைபிடிக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து குஜராத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் பேசினார்.

சீனாவுக்கு லாபம் அதில், மோடியின் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு அழிவுக்கான பாதையையே வகுத்துள்ளது. 2016-17 ஆண்டில் சீனாவின் இறக்குமதி 1.96 லட்சம் கோடியாக இருந்தது. இந்த ஆண்டு 2.41 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இன்னும் மோசமாகும் அதுபோல ஜி.எஸ்.டி., நடவடிக்கையும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் வேலைவாய்ப்பையும் வெகுவாக பாதித்துள்ளது. அதன் வெளிப்பாடே மொத்த உள்நாட்டு உற்பத்தி மோசமான நிலையை எட்டியுள்ளது. இன்னும் மோசமான நிலைக்கு செல்லும் வாய்ப்பும் உள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக