செவ்வாய், 7 நவம்பர், 2017

திமுகவிடம் நூல்விட்டு பார்க்கும் பாஜகா ,,,, குருமுர்த்தி ஆலோசனை ? ஈயோட்டும் பாஜகா கூட்டங்கள் ..

டிஜிட்டல் திண்ணை: திமுகவை நெருங்கும் பாஜக!   குழப்பத்தில் அதிமுக!
மின்னம்பலம் : “நேற்று டிஜிட்டல் திண்ணையில், ‘எப்படி இருந்தாலும் 2 ஜி வழக்கின் தீர்ப்பு விரைவில் வந்துவிடும். தீர்ப்பு எப்படி வரப்போகிறது என்பது தெரியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி கருணாநிதி வீட்டுக்கு மோடி வந்தார் என்று ஆச்சரியமாக இருக்கிறது!’ என்று நான் கேட்ட கேள்விக்கு, ‘2 ஜி வழக்கின் தீர்ப்பு இன்னும் தள்ளிப்போகும் என்றுதான் சொல்கிறார்கள். எப்படியும் டிசம்பர் 9ஆம் தேதி, அதாவது குஜராத் தேர்தலுக்கு முன்பாக வழக்கின் தீர்ப்பு வர வேண்டாம் என பிஜேபி நினைக்கிறது. காரணம், 2 ஜி வழக்கிலிருந்து எல்லோரும் விடுதலை ஆவார்கள். தீர்ப்பு திமுகவுக்குச் சாதகமாகவே வரும் எனத் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது.
தீர்ப்பு முன்கூட்டியே வந்தால், அது குஜராத் தேர்தல் முடிவை பாதிக்கும் என பிஜேபி கணக்கு போடுகிறது. தீர்ப்பு திமுகவுக்குச் சாதகமாக வரும் என்பது உறுதியானதால்தான் மோடி கோபாலபுரத்துக்கே வந்தார் என்று சொல்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் மோடி மீது திமுகவினர் மத்தியில் மரியாதை கூடியிருப்பதைப் பார்க்க முடிகிறது” என்ற பதிலை ஸ்டேட்டஸ் ஆக போட்டிருந்தது ஃபேஸ்புக்.

“2 ஜி வழக்கின் தீர்ப்பு தேதி டிசம்பர் 5ஆம் தேதி அறிவிக்கப்படும்’ என நீதிபதி ஒ.பி.ஷைனி இன்று அறிவித்திருக்கிறார். ஆக, டிசம்பர் 9ஆம் தேதிக்கு முன்பு தீர்ப்பு வரப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. தகவல்களை முன்கூட்டியே கொடுத்த மின்னம்பலத்தின் டிஜிட்டல் திண்ணைக்கு, அதாவது ஃபேஸ்புக்கிற்கு ஒரு பொக்கே என்ன... ஓராயிரம் பொக்கே கொடுக்கலாம்!” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
“நன்றி” என ஒரு வார்த்தையில் ஸ்டேட்டஸ் போட்ட ஃபேஸ்புக், அடுத்த ஸ்டேட்டஸை டைப்பிங் செய்ய ஆரம்பித்திருந்தது.
“மோடியின் தமிழக விசிட் எடப்பாடி பழனிசாமியைத்தான் குழப்பசாமியாக மாற்றிவிட்டது. மோடி கோபாலபுரம் போனதை பழனிசாமியால் ஜீரணிக்கவே முடியவில்லை. பன்னீர்செல்வத்துடன் இது சம்பந்தமாக ஆலோசித்த பழனிசாமி அடுத்ததாக, ஆடிட்டர் குருமூர்த்தியுடன் பேசியிருக்கிறார்.
பிஜேபிக்கும் எடப்பாடிக்கும் இடையில் இணைப்புப் பாலமாக இருப்பவர் குருமூர்த்திதான். ‘பிரதமர் சென்னைக்கு வருவதை எங்களுக்கு சொன்னாங்க. அவர் கருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் போகப் போறார் என்ற தகவலைக் கடைசி நிமிடத்தில்தான் எங்களுக்குச் சொல்லணுமா? அவர் அங்கே போறேன்னு சொன்னால் நாங்க தடுத்துடுவோமா? ஏன் இப்படி செய்யுறாங்க? அவங்க என்ன சொல்றாங்களோ அதைத்தானே நாங்க செஞ்சுட்டு இருக்கோம். அப்புறம் எதுக்காக எங்களை அசிங்கப்படுத்துறாங்க..?’ என்று கேட்டாராம் பழனிசாமி.
அதற்கு குருமூர்த்தியோ, ‘உங்களுக்கு எப்படி கடைசி நேரத்தில் சொன்னாங்களோ அப்படித்தான் எனக்கும் சொன்னாங்க. பிரதமர் கோபாலபுரத்துக்கு போகும் தகவல் எனக்கும் முன்கூட்டியே தெரியாது’ என்று சொல்ல... ‘நாங்க வேண்டாம்னு அவர் நினைக்கிறாரா?’ என்று வெளிப்படையாகவே கேட்டுவிட்டாராம் பழனிசாமி. குருமூர்த்தி அவரை சமாதானப்படுத்தியிருக்கிறார்.
ஆனால் டெல்லி வட்டாரத்தில் விசாரித்தால், ‘தமிழ்நாட்டில் இனி அதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை. அதனால் அவங்களை நம்பி கூட்டணி வைக்கிறதால பிஜேபிக்கு எந்த நல்லதும் நடக்காது. எப்படியாவது திமுகவை வழிக்குக் கொண்டுவாங்க. கருணாநிதி இப்போ உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்காரு. அவரைப் போய் பாருங்க. ஆறுதல் சொல்லுங்க. மத்ததை அப்புறம் பேசுவோம்’ என டெல்லியில் உள்ள முக்கிய பிஜேபி தலைவர்களுக்கு ஐடியா கொடுத்தவரே குருமூர்த்திதான் என்கிறார்கள். அதன் பிறகுதான் மோடியின் சென்னைப் பயணத்தில் திடீரென கோபாலபுரம் விசிட் சேர்க்கப்பட்டது’ என்று சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இங்கே பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிக்கொண்டு இருக்கிறார் குருமூர்த்தி.” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ். அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது வாட்ஸ் அப்.
“காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?” என்ற கேள்வி வாட்ஸ் அப்பில் இருந்து வர... பதிலை உடனே டைப்பிங் செய்து அடுத்த ஸ்டேட்டஸ் ஆக போஸ்ட் செய்தது ஃபேஸ்புக்.
“காங்கிரஸும் அப்செட்டில்தான் இருக்கிறது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் சிலர் திருநாவுக்கரசருடன் பேசியிருக்கிறார்கள். அவரோ, ‘நான் திமுக தரப்பில் பேசிட்டேன். இது அரசியல் உள்நோக்கம் கொண்ட சந்திப்பு இல்லை. தலைவர் உடல்நலம் பற்றித்தான் விசாரிக்க வந்தாரு என்று திமுகவினர் சொல்லிட்டாங்க. அதனால இதை நாம பெருசா எடுத்துக்கத் தேவை இல்லை’ என்று சொன்னாராம். காரியம் இல்லாமல் மோடி எங்கேயும் போக மாட்டாரே...’ என்ற கேள்விதான் திரும்பத் திரும்ப டெல்லி வட்டாரத்திலிருந்து கேட்கப்படுகிறது. காரியம் இருக்கா, இல்லையா என்பது போகப் போகத்தான் தெரியும்” என்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக