வியாழன், 16 நவம்பர், 2017

கோமாளி ஆட்சி நடக்கிறது! பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா விளாசல்

Chinniah Kasi :புதுதில்லி, நவ. 15 - இந்திய நாட்டில் தற்போது கோமாளித்தனமான ஆட்சி நடந்து கொண்டிருப்பதாக பாஜக மூத்த தலைவரும், வாஜ்பாய் ஆட்சியில் மத்திய நிதியமைச்சராக இருந்தவருமான யஷ்வந்த் சின்ஹா சாடியுள்ளார்.கறுப்புப் பணத்தை கைப்பற்றப் போவதாக கூறி, பணமதிப்பு நீக்கத்தை அமல்படுத்திய மோடி - அருண் ஜெட்லி கூட்டணியால் நாட்டுக்கு ரூ. 3 லட்சத்து 75 ஆயிரம் கோடி இழப்புதான் ஏற்பட்டுள்ளது என்றும், இதைப் பார்த்தால், 700 ஆண்டுகளுக்கு முன்பு, பழைய நாணயத்தை தடை செய்து, சுல்தான் முகமது- பின்- துக்ளக் ஆட்சியில் அரங்கேறிய கோமாளித்தனம்தான் நினைவுக்கு வருவதாகவும் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது;பண மதிப்பு நீக்க நடவடிக்கை யால் 1 லட்சத்து 28 ஆயிரம் கோடி நேரடி செலவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது; பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சி 1.5 சதவிகிதம் குறைந்துள் ளதாக கூறப்பட்டு இருந்தாலும், உண்மையில் இதைவிட பாதிப்பு அதிகம் என்பதே எனது கணிப்பு; இந்திய பொருளாதாரத்தில் 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி அளவுக்கு பாதிப்பை இந்தநடவடிக்கை ஏற்படுத்தி யிருக்கும் என்று மதிப் பிடுகிறேன்.
வரலாற்றில் முடியாட்சிகளிலும் ஆட்சி கள் மாறும்போது, மன்னர்கள் பணமதிப்பு நீக்கநடவடிக்கையை எடுத்திருக் கிறார்கள்; முன்பிருந்த நாண யங்களைத் தடை செய்து விட்டுபுதிய நாணயத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்;
இந்தியாவை எடுத்துக் கொண்டால், 700 ஆண்டுகளுக்கு முன்பாக பண மதிப்புநீக்கம் நடந்துள்ளது; இதனை மேற்கொண்ட சுல்தான் முகமதுபின் துக்ளக், தலைநகரை தில்லி யிலிருந்து தௌலதாபாத்துக்கு மாற்றியதன் மூலம் வரலாற்றில் பின்னாளில் எதிர்மறையாக புகழடைந்தார்.பணமதிப்பு நீக்க நடவடிக்கை அதிமுக்கியமானது என்று எதனடிப்படையில் மோடி கருதினார் என்று தெரியவில்லை; ரிசர்வ் வங்கி ஆளுநர், நிதியமைச்சருக்குப் பதிலாக பிரதமரே அதனை அறிவிக்கிறார் எனும்போது, அதை மிகமுக்கியமானதாக அவர் கருதி யிருக்கிறார்; 2016 நவம்பர் 8-ஆம்தேதி இரவில், மோடியின் அந்தஒருமணி நேர உரையில் கறுப்புப் பணம் என்ற வார்த்தைமட்டும் 74-75 முறை கூறப் பட்டது. கள்ள நோட்டு, பயங்கரவாதம் என்ற வார்த்தைகளையும் பயன்படுத்தினார்; ஆனால்,ஒருமுறை கூட ரொக்க மற்ற பரிவர்த்தனை, டிஜிட்டல் பொருளாதாரம் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால், நாட்டில் ஒருவரிடமும் பணம் இல்லாமல் போய்விட்டது.
நாடு ரொக்கமற்றதாகி விட்டது. அதன்பிறகுதான் மோடி ரொக்க மற்ற பொருளாதாரம் பற்றி பேசினார்.சுமார் 18 லட்சம் டெபாசிட்கள் மீதுவிசாரணை நடக்கிறது என்று மோடியே கூறினார். இதன் மூலம் உலகம் முழுவதும் இந்தியா திருடர்களின் நாடு என்ற செய்தியே பரவியது. இந்தியர்கள் அனைவரும் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் போலும்; ஒருவருமே நேர்மையானவர்கள் இல்லை போலும்; என்று கருத வைத்தார்கள்.அந்த நாட்களில் ஒரு புதிய வழக்கத்தையும் ஏற்படுத்தி னார்கள். அனைத்தையும் ஊடகநிகழ்வுகளாக்கினார்கள். எங்க ளுக்கு முன்பாக எதுவுமே இந்த நாட்டில்நடைபெறவில்லை என்ற துணிந்துசகஜமாக பேசினார்கள். வாஜ்பாய் 6 ஆண்டுகள் நாட்டை ஆண்டதையும் மறந்து விட்டார்கள். தற்போது நிதியமைச்சர் அருண்ஜெட்லி, நம் நாட்டின் பொருளாதார அடிப்படைகள் வலுவாக இருக் கிறது என்கிறார்; பணவீக்கம் கட்டுப் பாட்டில் இருக்கிறது என்கிறார்; பங்குச்சந்தை எழுச்சி பெற்று இருக்கிறது என்கிறார்; அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் சான்றிதழையும் எடுத்துக் காட்டுகிறார்;
ஆனால் இவையெல்லாம் சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலைசரிவினால் கிடைத்த லாபங்கள் என்பதை வசதியாக மறைக்கிறார். குஜ ராத் சிங்கம் (மோடி) கர் ஜித்ததால் எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்கள் பயந்து போய் விலைகளைக் குறைக்க முடிவெடுக்கவில்லை.உள்நாட்டு தேவை, உள் நாட்டு சேமிப்புகளே நம் பொருளா தாரத்தை செலுத்தும் சக்திகள். மாறாக அயல்நாட்டுத் தேவையோ அயல்நாட்டு முதலீடுகளோ அல்ல. இவற்றை ஆட்சியாளர்கள் கவ னத்தில் கொள்ளவில்லை. தற்போது நமது நாட்டின் பொருளாதாரம் ஒற்றைக்காலில் நிற்கிறது.ஜி.எஸ்.டி. சிறப்பானதாக, எளிமையாக இருக்க வேண்டும் என்றால் ஒரே ஒரு வரி விகிதம் மட்டுமே அதில் இருக்க வேண்டும்; இப்போது 177 பொருட்களுக்கு வரிவிகிதத்தை திரும்ப பெற்று இருக் கிறார்கள். இது, நிச்சயமாக அவர் களின் தோல்வியை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக