மின்னம்பலம் :கடும்
மழை பெய்தால் கொழும்பு நகரம் முழுவதும் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்று
மாநகரச் சபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க
ரணவக்க தெரிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டுகான வரவு செலவு திட்டத்தின் விவாதத்தில் கலந்துகொண்ட அவர் கூறுகையில், “100 ஆண்டுகளுக்கு முன்பு பிரித்தானியர்களால் கட்டப்பட்ட அம்பத்தனை மற்றும் நாகலகம் வீதி அணைக்கட்டுகள் மிகவும் சீர்கேடு அடைந்துள்ளது. அதை யாரும் சரியாகப் பராமரிப்பதில்லை, தற்போது உடையும் ஆபத்தில் உள்ளது.
இந்த இரண்டு அணைகளும் உடைந்தால் கொம்பு மற்றும் களனி ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கும் நிலை ஏற்படும். இந்த இரண்டு அணைகளும் கடுமையான மழையை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டால் நிச்சயமாக உடைந்து விடும். இதனால் கொழும்பு நகரமும், நாடாளுமன்றமும் நீரில் மூழ்கிவிடும்.
எனவே, இந்த இரண்டு அணைகளையும் விரைவில் பராமரித்து பேராபத்திலிருந்து அனைவரையும் காக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக