15 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து
கொலை செய்த மூன்று ஆண்களுக்கு மரண தண்டனை விதித்து மகாராஷ்டிராவிலுள்ள
மாவட்ட நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.
20 வயதுக்கு மேற்பட்ட அந்த இளைஞர்கள், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்தனர். இதுகுறித்த வழக்கில் இந்த ஆண்களை குற்றவாளிகள் என நவம்பர் 18ம் தேதியன்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பாதிக்கப்பட்ட சிறுமி ஆதிக்க சாதியான மராத்தா சாதியைச் சேர்ந்தவர். குற்றம் சாட்டப்பட்ட ஆண்கள் அனைவரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இச்சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவின் மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவில் இலட்சக்கணக்கான மராத்தா சமூகத்தை சேர்ந்தவர்கள் சில வாரங்கள் போராட்டங்கள் நடத்தினர்.
இதில் பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றம் புரிந்தவர்கள் என இருத்தரப்பினரும் கோபார்டி என்ற கிராமத்தில் வசித்ததால், இவ்வழக்கு பொதுவாக கோபார்டி வழக்கு என்று அறியப்படுகிறது.
இந்த குற்றத்தின் கொடூரத்தன்மையானது, கடந்த 2012ம் ஆண்டு இந்திய தலைநகரான தில்லியில் பேருந்தொன்றில் இளம்பெண் ஒருவர் கும்பலொன்றால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதுடன் பலரால் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் சமீபத்திய ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கவனத்தைப் பெறுகின்றன.
இருந்தபோதிலும், ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பாலியல் வல்லுறவு வழக்குகளைப் பதிவு செய்கிறது காவல் துறை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக