வியாழன், 9 நவம்பர், 2017

190 இடங்கள்;1800 அதிகாரிகள்: சசிகலா-தினகரன் உறவினர்கள் வீடுகள் அலுவலகங்களில் சோதனை

தினதந்தி: 190 இடங்கள்; 1800 அதிகாரிகள்: சசிகலா - தினகரன் உறவினர்கள் வீடுகள் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் வருமான வரி சோதனை நடத்தினர் இதனால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை: சசிகலா உறவினர் வீடுகள், தொழிலகங்கள் என 190 இடங்களில் இன்று வருமான வரி சோதனை நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் 105 இடங்களில் சோதனை நடக்கிறது.சென்னையில் 20 இடங்கள், திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 12 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனையில் வருமான வரி ஆணையர்கள் 6 பேர் உட்பட 1,800 அதிகாரிகள் ஈடுபட்டனர். ஒவ்வொரு இடத்திலும் 5 முதல் 10 பேர் வரை இடம்பெற்றனர். கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 1000 அதிகாரிகள் வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். SRINI weds MAHI என்ற பெயரில் திருமணத்திற்கு செல்வதுபோல் சோதனைக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர்.

* சென்னையில் அடையாறில் உள்ள தினகரன் வீடு,
* ஈக்காடு தாங்கலில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகம்,
* போயஸ்கார்டனில் உள்ள ஜெயா டி.வி.யின் பழைய அலுவலகம்,

* ஈக்காடு தாங்கலில் உள்ள நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை அலுவலகம்,
* வேளச்சேரியில் உள்ள ஜாஸ் அலுவலகம்,
* தியாகராய நகரில் உள்ள இளவரசி மகள் டாக்டர் கிருஷ்ணப்பிரியா வீடு.
* நுங்கம்பாக்கத்தில் உள்ள இளவரசி மகன் விவேக் வீடு.
* பெசன்ட் நகரில் உள்ள நடராஜன் வீடு.
* படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை .
*ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டு.
*கர்நாடக மாநில அ.தி. மு.க. அம்மா அணி செயலாளராக இருக்கும். புகழேந்தியின் பெங்களூரு முருகேஷ்பாளையம் முனுசாமப்பா லே-அவுட் பகுதியில் உள்ள வீடு.
* திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மன்னை நகரில் டி.டி.வி.தினகரனின் வீடு
* மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் உள்ள சசிகலாவின் தம்பி  திவாகரன் வீடு.
* தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள சசிகலாவின் உறவினரான டாக்டர் வெங் கடேஷ் வீடு.
* மன்னார்குடி அன்னவாசல்  தெருவில் உள்ள தினகரன் அணி ஆதரவாளரும் , அ.தி.மு.க. அம்மா அணியின் திருவாரூர் மாவட்ட செயலாளருமான எஸ்.காமராஜ்  வீடு.
* மன்னார்குடி நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ராசுப்பிள்ளையின் வீடு.
* திருவாரூர் அருகே கீழ திருப்பாலங்குடியில் தினகரனின் உதவியாளர் விநாயகத்தின் வீடு.
* தஞ்சை வடக்கு மாவட்ட வக்கீல் அணி செயலாளர் வேலு கார்த்திகேயன் வீடு.
* சசிகலாவின் அண்ணன் மனைவியான இளவரசியின் சம்பந்தியும்  ஓய்வு பெற்ற பொதுப் பணித்துறை என்ஜினீயருமான  கலியபெருமாளின் வீடு.
* திருச்சி கே.கே.நகர் உடையான் பட்டியில் உள்ள  அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதியின் தம்பி யும், தினகரன் அணியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளருமான பரணி கார்த்திகேயனின் வீடு.
*அறந்தாங்கி அருகே நெற்குப்பையில் உள்ள பரணி கார்த்திகேயனின் வீடு
* தஞ்சை அருளானந்த நகர் பகுதியில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜனின் வீடு.
* சசிகலாவின் உறவினர் மறைந்த மகாதேவன் வீடு.
* ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் இல்லத்தில் சோதனை
* கர்சன் எஸ்டேட்
* மன்னார்குடியில் அமைச்சர் காமராஜ் ஆதரவாளரான பொன்.வாசுகிராமன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை.
* ஜெயலலிதாவின் மருத்துவரும், தினகரனின் உறவினருமான டாக்டர். சிவக்குமாரின் இல்லத்தில் வருமான வரி சோதனை.
* டிஎன்பிஎஸ்சி உறுப்பினரும், வழக்கறிஞருமான பாலுச்சாமி வீட்டில் வருமான வரித்துறை சோதனை.
* திருத்துறைப்பூண்டியில் திவாகரன் நண்பரான ஓய்வுபெற்ற வேளாண் இயக்குநர் நடேசன் வீட்டில் சோதனை.
* கோடநாடு எஸ்டேட் கணக்கை நிர்வகிக்கும் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
* திருச்சி : ஜெயலலிதாவின் மருத்துவரும், தினகரனின் உறவினருமான டாக்டர். சிவக்குமாரின் இல்லத்தில் வருமான வரி சோதனை.
* மன்னார்குடியில் அமைச்சர் காமராஜ் ஆதரவாளரான பொன்.வாசுகிராமன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
* வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் வடகாட்டில் வெங்கட் என்பவரது வீட்டில் வருமானவரி அதிகாரிகள் சோதனை

 சசிகலாவின் உறவினர் விவேக் நடத்தும் ஜாஸ் சினிமா அலுவலகம் மற்றும் அதற்கு சொந்தமான லக்ஸ் சினிமா அரங்குகளிலும் சோதனை நடக்கிறது. இதன் காரணமாக வேளச்சேரியில் உள்ள லக்ஸ் சினிமாவின் 11 அரங்குகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பெரும் நிறுவனமாக வளர்ந்தது ஜாஸ் சினிமாஸ். இதனை சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே ஜாஸ் சினிமாஸ் ஆரம்பிக்கப்பட்டது. வந்த வேகத்தில் அப்போதுதான் புதிதாக வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் தொடங்கப்பட்ட சத்யம் சினிமாஸின் லக்ஸ் சினிமாவை வாங்கியது ஜாஸ். மொத்தம் 11 அரங்குகள். அவற்றில் ஒன்று ஐமேக்ஸ் தியேட்டர். 1000 கோடி ரூபாய்க்கு இந்த அரங்குகளை வாங்கியதாக தகவல் வெளியானது.

ஆனால் அப்போது எந்த ரெய்டும் நடத்தப்படவில்லை. ஜாஸ் நிறுவனமும் கபாலி, விவேகம் என பெரிய படங்களை வாங்கி விநியோகித்தது. இன்று ஜாஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் முக்கியமான விநியோக நிறுவனமாகத் திகழ்கிறது.

இந்த நிறுவனத்தில் இன்று காலை முதலே வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் 11 அரங்குகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. படம் பார்க்க ஆர்வத்துடன் வந்த பல நூறு பேர் காட்சிகள் இல்லை என்றதும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக