Mohan Prabhaharan - Oneindia Tamil
சென்னை: சென்னையில் நடக்க இருந்த போராட்டத்தில் பங்கேற்க சென்னை வந்துள்ள
செவிலியர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை முன் வைத்து செவிலியர்கள்
இன்று சென்னையில் போராட்டம் நடத்த உள்ளனர். இதற்காக தமிழகத்தின் பல
பகுதிகளில் இருந்தும் சென்னைக்கு செவிலியர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்க வரும் செவிலியர்களை ஆங்காங்கே தடுத்து
நிறுத்தி போலீஸார் கைது செய்து வருகிறார்கள். சென்னை அண்ணாசாலையில் உள்ள
டி.எம்.எஸ் வளாகத்தில் 1000க்கும் அதிகமான செவிலியர்கள் சிறை
பிடிக்கப்பட்டு உள்ளார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக