செவ்வாய், 31 அக்டோபர், 2017

SRM பாரிவேந்தர் மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

nakkeeran : சினிமா தயாரிப்பாளர் மதனால் பண மோசடி செய்யப்பட்ட மாணவர்கள் கொடுத்த புகாரில் பாரிவேந்தர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை  சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடம் வாங்கி தருவதாக கூறி  சினிமா தயாரிப்பாளரான எஸ்.மதன், நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்களிடம் பணம் வாங்கியுள்ளார். அப்படி வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமலும், மருத்துவ இடம் வாங்கித் தராமலும் மதனும் அவரது கூட்டாளிகளும் ஏமாற்றியுள்ளனர். இது தொடர்பாக பணம் கொடுத்த பெற்றோர்கள்  சென்னை மாநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், மதன் உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் சேர்க்கப்பட்டனர்

பெற்றோரிடம் பணம் வாங்கி மோசடி செய்த மதன் கடந்த ஆண்டு மே மாத இறுதியில் காசியில் கங்கை நதியில் சமாதியாவதாக கூறி  தலைமறைவானார்.
6 மாதங்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த மதனை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் திருப்பூரில் கைது செய்தனர்.இதனிடையே  எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக கல்லூரியிலும் இடம்வாங்கி தருவதாக மதன் ஏமாற்றியுள்ளதால், எஸ்.ஆர்.எம். குழுமத்தின் மீதும்  காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. மதன் மோசடி செய்த வழக்கில் தேவையில்லாமல் சேர்க்கப்பட்டதால், கல்வி குழுமத்தின் நற்பெயர் பாதிப்படைவதால், மாணவர்கள் குற்றச்சாட்டும் தொகையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு எண்ணில் கட்ட தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதேநேரம் தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒத்துக்கொள்வதாக எடுத்துக்கொள்ளக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் இந்த வழக்கில் எஸ்.ஆர்.எம். குழும தலைவர் என்ற முறையில் கைது செய்யப்பட்ட பாரிவேந்தர், கடந்த ஆண்டு செப்டம்பர்  மாதம்  ஜாமினில் வெளிவந்தார். அப்போது, ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தபடி, 75 கோடி ரூபாய் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது. இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி பாரிவேந்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

;அந்த வழக்கில், தாங்கள் மதனிடம் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்பட்சத்தில் பாரிவேந்தர் மீதான வழக்கை ரத்து செய்ய ஆட்சேபனை இல்லை என பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.;">அதை பதிவு செய்த சென்னை உயர் நீதிமன்றம்  வழக்கை ரத்து செய்யாமல், பணத்தை மட்டும் பெற்றோரிடம் பிரித்து கொடுக்க வழக்கறிஞர் ஆணையரை நியமித்து பணத்தை பட்டுவாடா செய்ய தேதி நிர்ணயித்தார்.

;இந்த நிலையில்  தன் மீதான வழக்கை ரத்து செய்யாமல், பணத்தை கொடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பாரிவேந்தர் மேல்முறையீடு செய்தார்.

;அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாரிவேந்தர் மீதான வழக்கை ரத்து செய்ய தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என 136 பெற்றோர்கள் தரப்பில் பிராமண பத்திரம் தாக்கல் செய்யவும், பின்னர் உடனடியாக பாரிவேந்தர் மீதான வழக்கை மட்டும் ரத்து செய்யவும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு  உத்தரவிட்டது. அதன்பின்னரே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்ட தொகையை பிரித்து கொடுக்க வேண்டுமெனவும் உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டது.

;இந்த நிலையில்  இன்று இந்த வழக்கு மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அனைத்து பெற்றோர்கள் தரப்பிலும் ஆட்சேபனையில்லா பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதை உறுதிசெய்த நீதிபதி  எம்.எஸ்.ரமேஷ், மதன் உள்ளிட்டோர் மீதான புகாரில் பாரிவேந்தர் மீதான வழக்கை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

;அடுத்த கட்டமாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள பணத்தை மாணவர்களுக்கு உடனடியாக பிரித்துக்கொடுத்து, அது தொடர்பான அறிக்கையை வழக்கறிஞர் ஆணையர் நவம்பர் 30ஆம் தேதி தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.- சி.ஜீவா பாரதி <

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக