செவ்வாய், 31 அக்டோபர், 2017

நடிகை ஆர்த்தி :விஜயை வச்சு படம் எடுத்தவங்க எங்க போனங்கண்ணே தெரியல

வெப்துனியா :நடிகர் விஜய் ரசிகர்களுக்கும், தல அஜீத் ரசிகரான நடிகை ஆர்த்திக்கும் இடையே டிவிட்டரில் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ரசிகர்களுக்கிடயே பிரபலமான நடிகை ஆர்த்தி, தனது டிவிட்டர் பக்கத்தில் பல கருத்துகளை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் விஜய் ரசிகர்களுடன் ஏற்பட்ட மோதலில் “எங்க தல-யால் எந்த தயாரிப்பாளருக்கும் நஷ்டம் ஆனதில்லை. ஆனால், உங்களை வச்சி படம் எடுத்த பல தயாரிப்பாளர்கள் எங்கே போனார்கள் என தெரியவில்லை” என பதிவிட்டார்.<;இதனால், கோபமடைந்த விஜய் ரசிகர்கள் அஜீத் நடித்து ஃபிளாப் ஆன ஆழ்வார், ஆஞ்சநேயா உள்ளிட்ட பல படங்களை வைத்து பதிலடி கொடுக்க ஆர்த்திக்கும், அவர்களுக்கும் இடையே டிவிட்டரில் மோதல் ஏற்பட்டது.
அதன் பின், அஜீத்தும், விஜயும் ஒன்றாக இணைந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு, விஜயிடம் பேசினேன்.  அவர் ஒரு மரியாதையும், அக்கறையுமுள்ள நபர். பெண்களை மதிப்பவர் என புகழந்து ஒரு டிவிட் போது சண்டையை முடிவுக்கு கொண்டுவந்தார் ஆர்த்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக