Siva
Oneindia Tamil
மதுரை: மதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தற்கொலைக்கு முயன்றதில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
மதுரை அருகே வண்டியூர் குறிஞ்சி நகரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கடன் பிரச்சனை காரணமாக கடந்த மாதம் 24ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
65 வயது ஜெகஜோதி அவரது மகன்கள் வேல்முருகன், குறிஞ்சி குமார், மருமகள்கள், பேரக்குழந்தைகள் ஜெய தாரணி, ஜெய மோனிகா, ஜெயசக்தி என 8 பேர் விஷம் குடித்தனர்.
இதில் 6 பேர் பலியாகினர். 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் குறிஞ்சி குமரனின் மனைவி செல்வி சிகிச்சை பலனின்றி நேற்று உயிர் இழந்தார்.
இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக