வியாழன், 5 அக்டோபர், 2017

அமேரிக்கா 59 பேரை கொன்றவனின் காதலியிடம் விசாரணை.. இதுவரை முன்னேற்றம் இல்லை

Siva . Oneindia Tamil  :   லாஸ் வேகாஸ்: லாஸ் வேகாஸில் 59 பேரை கொன்ற ஸ்டீபன் பாடக்கின் காதலியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது ஸ்டீபன் பாடக் என்பவர் கூட்டத்தை நோக்கி சுட்டதில் 59 பேர் பலியாகினர், 527 பேர் காயம் அடைந்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் ஸ்டீபனின் காதலி மரிலூ டான்லியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஸ்டீபனின் காதலி ஸ்டீபன் எதற்காக இப்படி துப்பாக்கிச்சூடு நடத்தினார், இந்த தாக்குதல் குறித்து முன்பே தெரியுமா, அப்படி தெரிந்திருந்தால் அதிகாரிகளுக்கு ஏன் தகவல் கொடுக்கவில்லை என்று போலீசார் டான்லியிடம் கேட்டுள்ளனர். போலீசார் போலீசார் முதல்கட்ட விசாரணையில் ஸ்டீபன் ஏன் இப்படி செய்தார் என்பது தெரியவில்லை. அதனால் டான்லி தான் போலீசாருக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை என்று கூறப்படுகிறது.
விமான டிக்கெட் விமான டிக்கெட் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு ஸ்டீபன் விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து டான்லியை பிலிப்பைன்ஸில் இருக்கும் அவரது குடும்பத்தாரை பார்த்து வருமாறு கூறி அனுப்பி வைத்துள்ளார்.

  ஸ்டீபன் தனது காதலி டான்லியின் வங்கி கணக்கில் பணம் போட்டுள்ளார். எதற்கு என கேட்டதற்கு நமக்காக ஒரு வீடு வாங்கவே பணம் என்று தெரிவித்துள்ளார். வன்முறை வன்முறை திடீர் என்று ஸ்டீபன் என்னை பிலிப்பைன்ஸில் உள்ள என் வீட்டிற்கு அனுப்பி வைத்தது, பணம் கொடுத்தது எல்லாம் முதலில் கவலையாக இருந்தது. என்னை அனுப்பி வைத்துவிட்டு அவர் வன்முறையில் ஈடுபடுவார் என்று நான் நினைக்கவே இல்லை என்கிறார் டான்லி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக