சனி, 21 அக்டோபர், 2017

மதுசூதனன் : எனது அரசியல் வாழ்வை முடக்க நினைக்கும் ஜெயக்குமார்

எனது அரசியல் வாழ்வை முடக்க நினைக்கும் ஜெயக்குமார் மீது இபிஎஸ், ஓபிஎஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்t;
தினகர:ன் தண்டையார் பேட்டை: எனது அரசியல் வாழ்க்கையை முடக்க நினைக்கும் அமைச்சர் ஜெயக்குமார் மீது இபிஎஸ், ஓபிஎஸ்சும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுசூதனன் கூறியுள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட காசிமேடு, விநாயகபுரம், தண்டையார் நகர், பவர் குப்பம், சிங்காரவேலர் நகர், எம்ஜிஆர் நகர், திடீர் நகர், பல்லவா நகர், ஒய்எம்சிஏ குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் பால்பாக்கெட் ஆகியவற்றை அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மூத்த தலைவர்கள் இருந்தால் தன்னால் எதுவும் ெசய்ய முடியாது என்ற பயத்தில் தலைமையின் அனுமதி இல்லாமல் அமைச்சர் ஜெயக்குமார், தான்தோன்றி தனமாக செயல்படுகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீனவ சமுதாய மக்களை நிறுத்த வேண்டும் என்று கூறுகிறார். மீனவ சமுதாய மக்களுக்கு இவர் என்ன செய்துள்ளார்? கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக விசைபடகில் சீனா இன்ஜினை பயன்படுத்த கூடாது என்று மீனவர்கள் போராடி வருகிறார்கள். ஆனால் சீனா இன்ஜினை பயன்படுத்துவோர்களுக்கு ஆதரவாக ஜெயக்குமார் செயல்பட்டு வருகிறார்.


1996ம் ஆண்டில் இருந்து எனது அரசியல் பயணத்தை முடக்கும் விதமாக ஜெயக்குமார் செயல்படுகிறார். மீனவ மக்கள் மீது பாசம் உள்ளவர் போன்று காட்டி கொள்கிறார். ஆனால் மீனவ மக்களுக்கு எதிராகத்தான் செயல்படுகிறார். இபிஎஸ்.சும், ஓபிஎஸ்.சும் ெஜயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கமலஹாசன் சிறந்த நடிகர். அவருக்கு மக்களிடையே செல்வாக்கு இல்லை. நிலவேம்பு கசாயத்தை குறைகூறும் கமல், அதற்கு மாற்று மருந்து இருந்தால் கூறட்டும். அதை நாங்கள் பயன்படுத்துகிறோம். டிடிவி தினகரன், ஏதோ ஒரு காரணத்துக்காக காய் நகர்த்தி கொண்டிருக்கிறார். டிடிவி தினகரனுக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் திருவொற்றியூர் முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன், வடசென்னை வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக