தினத்தந்தி : புதுடெல்லியில் தலைமை செயலகம் முன் நிறுத்தப்பட்டு இருந்த முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருடப்பட்டு உள்ளது.
புதுடெல்லி, புதுடெல்லியில் தலைமை செயலகம் முன் நிறுத்தப்பட்டு இருந்த முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருடப்பட்டு உள்ளது. டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் எப்போதும் பயன்படுத்தும் வேகன் ஆர் காரை தலைமை செயலகத்தில் இருந்து யாரோ திருடுவிட்டனர் என போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாலை 3:30 மணி அளவில் எங்களுக்கு புகார் வந்தது, இது தொடர்பாக விசாரிக்கிறோம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லி டிஜிபி மான்தீப் ரந்தாவா பேசுகையில், கார் திருட்டு தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது,
இது தொடர்பாக விசாரித்து வருகிறோம்,” என கூறிஉள்ளார். முதல்-மந்திரியின் காருக்கான பாதுகாப்பு தொடர்பான கேள்விக்கு, நாங்கள் அனைத்து காரணிகளையும் ஆய்வு செய்து வருகிறோம், விசாரணையில் காரணம் என்னவென்று தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்போதுதான் விசாரணை தொடங்கி உள்ளது, விசாரணை முடிந்ததுமோ முழு தகவலும் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் விஐபி கலாசாரத்தை தவிர்க்கும் விதமாக கேகன் ஆர் காரை ஆம் ஆத்மி ஒரு மொபைல் காராக பயன்படுத்தியது. முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கார் திருடப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக