ஞாயிறு, 29 அக்டோபர், 2017

சென்னை - வங்கதேசம் இடையே சரக்கு கப்பல் சேவை தொடக்கம்:

tamilthehindu : சென்னை – வங்கதேசம் இடையேயான கடலோர சரக்கு கப்பல் போக்குவரத்தை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி டெல்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் வங்கதேசத்தில் பயணம் செய்தபோது இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே கட லோர கப்பல் போக்குவரத்து உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி இந்திய துறைமுகங்களில் இருந்து வங்கதேச துறைமுகங்களுக்கு சரக்கு போக்குவரத்து என்பது கடலோர சரக்கு போக்குவரத்தாக கருதப்படும்.
கடலோர ரோ ரோ கப்பல்கள் மூலம் கடலோரத்தில் இயக்கப்படும் கப்பல்களுக்கு இந்திய துறைமுகங்களில் கப்பல் சார்ந்த மற்றும் சரக்குகள் சார்ந்த கட்டணங்களில் 80 சதவீதம் சலுகை வழங்கப்படும். போக்குவரத்து கட்டணங்களையும் நேரத்தையும் சிக்கனமாக்குவது, சர்வதேச சந்தைகளில் இந்திய பொருட்களின் போட்டியிடும் தன்மையை மேம்படுத்துவது ஆகியன இத்திட்டத் தின் இறுதி நோக்கங்கள் ஆகும்.

இந்த திட்டத்தின்படி, சென்னை துறைமுகத்தில் இருந்து வங்கதேசத்தில் உள்ள மோங்ளா துறைமுகத்துக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் 185 லாரிகளை ‘ரோ ரோ’ கடலோர கப்பல்கள் மூலம் நேற்று முதல் முறையாக அனுப்பியது. இதனை கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி நாக்பூரிலிருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
சென்னை துறைமுகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச் சர் பொன் ராதாகிருஷ்ணன், துறைமுக தலைவர் பி.ரவீந்திரன் ஆகியோர் கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்தனர்.
அசோக் லைலேன்ட் நிறுவனம் இதுவரை லாரிகளை வங்கதேசத்துக்கு சாலை வழியாக அனுப்பி வந்தது. இதனை கடல் வழியாக அனுப்பும்போது பயண நேரம் 15 நாட்கள் முதல் 20 நாட் கள் வரை குறைகிறது. அசோக் லைலேன்ட் நிறுவனம் தற்போது வங்கதேசம், இலங்கை மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுமார் 12 ஆயிரம் லாரி சேசிஸ்களை அனுப்புகிறது. கப்பல் போக்குவரத்து மூலம் வரும் ஆண்டுகளில் வங்கதேசம், இலங்கை நாடுகளுக்கு அனுப்பப்படும் லாரிகளின் அளவு 80 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சாலை போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக