ஞாயிறு, 29 அக்டோபர், 2017

திண்டுக்கல் அருகே இன்னொரு கீழடி?

Chinniah Kasi   :திண்டுக்கல் அருகே இன்னொரு கீழடி
ஆண்டு தமிழ் மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் இந்த கோட்டைமேட்டில் கீழடிக்கு இணையாக அகழ்வாய்வு மேற்கொண்டால் பல வியப்பூட்டும் செய்திகள் உலகிற்கு தெரியவரும். இந்த ஆய்வில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, பழனியாண்டவர் கலைக்கல்லூரி பேராசிரியர்கள் ஸ்ரீராஜா, மனோகரன், அசோகன், தொல்லியல் மாணவர் வீரகருப்பையா, சேரல் இளம்பொழியன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கோட்டை மற்றும் இப்பகுதியில் உள்ள தொல் பொருட்களை முதலில் சேகரித்தவர் இந்திய மாணவர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டத் துணைத்தலைவர் வீரகருப்பையா. இவர் பழனியாண்வர் கலைக்கல்லூரியில் தமிழ்பண்பாட்டு துறை மாணவராக உள்ளார். இந்த பகுதியில் தமிழர்களின் பண்பாடு குறித்த தகவல்களை நமது நிருபரிடம் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து நேரடியாக சென்று பார்வையிட்டு தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தியிடம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பழனி அருங்காட்சியக அதிகாரிகள், பழனியாண்டவர் கல்லூரி பேராசிரியர்கள் என அனைவரும் இந்த இடத்தை பார்வையிட்டு பொருட்களைச் சேகரித்துச் சென்றனர். தற்போது இந்த இடத்தில் அகழ்வாய்வு மேற்கொண்டால் மேலும் அரிய பொருட்கள் கிடைப்பதுடன், தமிழரின் பண்பாட்டை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலமு, திண்டுக்கல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக