ஞாயிறு, 29 அக்டோபர், 2017

ஜோக்கர் படத்தை விமர்சிக்காத பாஜக மெர்சலுக்கு விளம்பரம் கொடுப்பது ஏன்?

Vadamalai Kandaswamy  :ஜோக்கர் என்று ஒரு முழு நீள அரசியல் விமர்சன காமெடி படம் வந்தது. அந்த படத்தை பற்றி விமர்சிக்காதவர்கள் தற்போது மெர்சல் படத்தை விமர்சிப்பதால் இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. இந்த படம் தணிக்கை செய்யப்பட்ட பின்னரே வெளிவந்து உள்ளது. தணிக்கை குழுவில் மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டியவர்களே உறுப்பினர்களாக உள்ளனர். மெர்சல் படத்தில் மத்திய அரசின் நன்மதிப்பை கெடுக்க கூடிய வசனங்கள் எதுவும் இல்லை.
எனவே மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு இந்த படத்தை எதிர்ப்பது போல் மறைமுகமாக ஆதரவு தேடி தர இருக்கிறது.

விமர்சிப்பதை போல் ஊக்கம் அளிக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. < அரசியலில் ஆர்வம் காட்டும் ரஜினி, கமல், விஜய் போன்ற நடிகர்களை வளைத்துப் போட்டு அவர்கள் மூலம் தமிழகத்தில் கால் ஊன்ற பாரதீய ஜனதா கட்சி முயற்சிக்கிறது என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வேதனையோடு சுட்டிக்காட்டுகிறது.
நன்றி: Vadamalai Kandaswamy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக