சனி, 14 அக்டோபர், 2017

உடலின் அற்புத ஆட்டோ மெக்கானிசம் இந்த ரிதம். ,,.... ஒன்று குறைந்தாலும் மனிதன் நோயாளி ஆகிறான்.

Sarav.Urs: ஒரு நாள் இரவு நார்மலா தூங்க போறீங்க. ஆனா காலையில் நீங்க கண் விழிக்கவில்லை. எல்லோரும் அரண்டு போய் பார்க்கிறாங்க, உங்க இதயதுடிப்பும் மூச்சும் சீராக இருக்கிறது. ஆனால் உங்களை விழிக்க வைக்க முடியவில்லை....! உங்கள் மூளை லிட்டரல்லி ஷட் டவுன் ஆகி கிடக்கு... !!! எப்படி இருக்கும்... ??
2017'ல் உடலியலுக்கான நோபல் பரிசு, நம் உடலினை முழுதுமாக கன்ட்ரோல் செய்யும் உடலின் Bio Rhythm குறித்த ஆராய்ச்சியில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்காக Jeffrey C. Hall, Michael Rosbash and Michael W. Young ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நாம எத்தனை மணிக்கு சாப்பிடனும், எப்போ தூங்கனும், எப்போ எழுந்திரிக்கனும்ன்னு முடிவு செய்யும் உடலின் Circadian Rhythm குறித்த ஆராய்ச்சிக்கு தான் இந்த பரிசு...
நீங்க ஆரோக்கியமா இருப்பது இந்த ரிதம் கையில் தான் இருக்கு. தூக்கம், பசி, நீர் பிரிதல், மலம் பிரிதல், வியர்த்தல், உணவை செறித்தல், மூச்சு விடுதல், இதயம் துடித்தல், வேலை நேரத்தில் கவனமாக /ஆக்டிவாக இருத்தல், ஓய்வு நேரத்தில் ரிலாக்சாக இருத்தல்ன்னு எப்போ எங்க என்ன செய்யனும்ன்னு மொத்தமா முடிவெடுத்து உங்களை கேக்காமல் செய்துட்டே இருக்கும் ஒரு அற்புத ஆட்டோ மெக்கானிசம் இந்த ரிதம். மேலே சொன்னதுல ஒன்னு நடக்கலைன்னாலும் மனிதன் நோயாளி ஆகிறான்.

நீங்க காதலி கூட கொஞ்சிகிட்டோ, அக்குளை சொறிஞ்சுட்டோ, மோட்டுவளைய பாத்துட்டோ, பஸ்டாண்டுல ஜொள்ளு விட்டுட்டோ உங்க சமூக கடமைய ஆத்திட்டிருக்கும் போது, நம்ம செல்லில் இருக்கும் குட்டியூண்டு ஜீன், சூரிய வெளிச்சத்தை வைத்து பூமி சுற்றுவதை முடிவு செய்து, 'இந்த நேரத்தில் இவன் இதை செய்தால் சரியாக இருக்கும்ன்னு' முடிவெடுத்து மண்டையில் அடிக்க, நாம உடனே தாகம் எடுப்பதை உணர்ந்து தண்ணீர் குடிக்கிறோம். அல்லது டக்குன்னு கண் முழிச்சு, முதல் பாராவில் வந்த குழப்பங்கள் நேராமல் பார்த்துக்கிறோம். அந்த குட்டியூண்டு ஜீனை கண்டு பிடிச்சதுக்கு தான் நோபல்.
18'ம் நூற்றாண்டில் மைமோசா எங்கிற தாவரம் காலையில் சூரியனை பார்த்ததும் இலையை விரிக்கிறது, மாலையில் மூடிக் கொள்கிறது என்பதை பார்த்த ஒருவர் (Jean Jacques d'Ortous de Mairan (எனக்கும் பெயர் வாயில் நுழையவில்லை). அதை கொண்டு போய் இருட்டில் வைக்க, அது சரியாக மணி அடித்தார் போல் இருட்டிலும் காலையில் விரிந்து மாலையில் மூடிக் கொள்ள... Circadian Rhythm மனிதனுக்கு புரிய ஆரம்பித்திருந்தது....!!
அப்போதிலிருந்து இருந்து பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பின்னால் 1984'ல், மேலே சொன்ன நோபல்காரர்கள், முதல்ல ஒரு 'ஈ'யை வைத்து பரிசோதித்து, 'இரவில் அதன் உடலில் ஏற்படும் வேதியல் மாற்றம், ஒரு ப்ரொட்டீனை சேமித்து வைத்து அதன் மூலமாக பகல் முழுதும் நம் உடலை கட்டுப்பாடு செய்கிறதுன்னு' கண்டு பிடிச்சாங்க. ஆனாலும் ஏதோ ஒன்று இடிக்க, மேலும் பத்து வருட ஆராய்ச்சிக்கு பின் 1994'ல் இன்னொரு ஜீனையும் கண்டு பிடித்தார்கள். அதன் மூலமாக 24 மணி நேரமும் உடலின் அனைத்து செயல்பாட்டுக்கும் மூல காரணிகளை கண்டறிந்து 1970 முதல் 2017 வரை சுமார் 47 ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பின் நோபலை தட்டியிருக்கிறார்கள்.
மனிதனின் பரிணாம வளர்ச்சியில் அவன் நாகரீகம் அடைய அடைய பல்வேறு புது நோய்கள் உற்பத்தி ஆவதை இதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்ன்னு சொல்றாங்க. உணவு செறித்தல், உடல் சூடு, மூடு, ஹார்மோன் சுரப்பிகளின் செயல்பாடு என பல்வேறு செயல்களை விருப்பத்தின் பெயரில் இனி கூட்ட குறைக்க முடியும் என மருத்துவ உலகம் நம்ப தொடங்கி இருக்கிறது.
சின்ன உதாரணமாக...,
கலைஞரின் circadian rhythm அவருக்கு 94 வயதாவதாக சொல்கிறது. இரண்டு ப்ரொட்டீனை கூட குறைய வைத்து மீண்டும் 20 வயதில் ஒரு கலைஞரை 200 ஆண்டுகள் கழித்து மருத்துவம் கொண்டு வந்து நிறுத்தலாம்... என்பது சங்கரின் கற்பனையை விட ஃபேண்டசியாக இருக்கிறதல்லவா.... ;)
அவ்ளோ தூரம் போக வேண்டாம். தினமும் பல மணி நேரம் கண் விழித்து நம்ம ரிதத்தை கெடுப்பதால் கடந்த 50 ஆண்டுகளில் obesity, diabetes, sleep disorders, depression, and certain types of cancers, autism, and a variety of dementias, disorders அதிகரித்திருப்பதாக ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. அதில் ஒன்றை குணப்படுத்த முடிந்தாலும் அது மனித குலத்திற்கான பெரும் சாதனை தானே,...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக