சனி, 14 அக்டோபர், 2017

ஆழ்ந்த உறக்கத்தில் திமுக இணைய பொறுப்பாளர்கள் .. 2 ஜி ஸ்பெக்ட்ரம்


மார்ட்டின் சந்தர் கிங் · தொலைக்காட்சி/பத்திரிகைகளில் வந்த தவறான தகவலின் அடிப்படையில் "2G spectrum scam" என்ற விக்கிப்பீடியா பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. 2g யை விட அதிக இழப்பு இருப்பதாக சிஏஜி அறிக்கை கூறிய பின்பும் 3g மற்றும் 4g scamக்கு எந்த பக்கமும் இதுவரை உருவாக்கப்படவில்லை. 2g பக்கத்தில் உண்மைக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கவும் ஸ்பெஷல் கோர்ட் முடிவு செய்யும் முன்பே இது ஊழல் என்றும் வாட்டர்கேட் ஊழலுக்கு அடுத்தது என்றும் சிலர் சீறிய மெனக்கெடலோடு(??) இந்த பக்கத்தை உருவாக்கி இருக்கிறார்கள். உண்மைத்தன்மைக்கு ஏற்றவாறு இதை திருத்தி அமைக்க என்ன முயற்சி எடுத்திருக்கிறது திமுகவின் ஐடி விங்?
வழக்கமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் இழுத்தடிப்பார்கள். ஆனால் 2ஜி வழக்கை இழுத்தடிப்பது நீங்கள்தான் -- வழக்கு பதிவு செய்த சிபிஐ யின் வழக்கறிஞரிடம் நீதிபதி ஷைனி, கடும் தாக்கு...


 February 25
2G வழக்கில்... சமீபத்தில்....
சிபிஐயின் சிறப்பு வழக்குரைஞர் ஆனந்த் குரோவர். அவர் கடந்த இரண்டு மூன்று நாட்களாக பிதற்றி வருகிறார். திங்கட்கிழமை நடந்த விவாதம்.
"அலைக்கற்றை ஒதுக்கீடுக்காக தேசிய தொலைத் தொடர்புக் கொள்கையில் வகுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை ஆ.ராசா சரிவர கடைப்பிடிக்கவில்லை. அலைக்கற்றை எவ்வளவு உள்ளது, என்பதை முறைப்படி ஆராயாமல், தன்னிச்சையாக ராசா எடுத்த நடவடிக்கையால்தான் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, "யூனிடெக்' நிறுவனத்துக்கு சாதகமாக உரிமம் வழங்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டு, அதற்கு சாதகமாக அலைக்கற்றை ஒதுக்கீட்டை மேற்கொள்ள ராசா நடவடிக்கை எடுத்தார்'' என்று வாதிட்டார் குரோவர்.
ஆனந்த் குரோவரின் குற்றச்சாட்டுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த ஆ.ராசா, "அலைக்கற்றை எவ்வளவு உள்ளது என்பதை அறிந்த பிறகுதான், அதை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சட்டத்தை வளைக்கும் வகையில் தீவிரமாக நீங்கள் வாதிடலாம். ஆனால், நீதிமன்றத்துக்கு உள்ளே கோப்பில் உள்ள விவரத்தை மறைக்கும் வகையில் தவறான தகவலைத் தெரிவித்து, நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்காதீர்கள்' என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து ஆனந்த் குரோவர், "எனக்கே சட்டம் பற்றி போதிக்க முயற்சிக்கிறீர்களா? நான் ஒரு நேர்மையான வழக்குரைஞர்'' என்று கூறினார்.
இதற்குப் பதிலளித்த ராசா, "நீங்கள் பெரிய நீதிமன்றத்தில், மூத்த வழக்குரைஞராக இருக்கலாம். நானும் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்குரைஞர் தொழிலை செய்து வந்தவன்.
அதற்காக எனக்கு எதிராக நீங்கள் கண்மூடித்தனமாக முன்வைக்கும் பொய்யான தகவலை 'சரி' என்று என்னால் எவ்வாறு அனுமதிக்க முடியும். குற்றம்சாட்டப்பட்டுள்ளவன் என்ற முறையில் எனது தரப்பு விளக்கத்தை அளிக்க கடமைப்பட்டுள்ளேன். இந்த வழக்கு தொடர்புடைய கோப்பிலேயே ஐந்து இடங்களில் முறைப்படி அலைக்கற்றை ஒதுக்கீடுக்கு முன்பு அதன் அளவு குறித்து ஆராய்ந்த விவரம் உள்ளது. முறையாக வழக்கின் கோப்பை படிக்காமல் பொய் உரைத்தால் அதை ஏற்க முடியாது'' , என்றார்.
இதையடுத்து, ஆனந்த் குரோவர் "எனக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்கக் கூடாது'' என்றார்.
இதைத் தொடர்ந்து சிறப்பு நீதிபதி சைனி தலையிட்டு இரு தரப்பையும் சமாதானப்படுத்தினார். இந்த வழக்கில், ராசாவுக்கு வாய்ப்பு வரும் போது அவர் தனது தரப்பு வாதத்தை முன்வைக்க அனுமதி அளிக்கப்படும் என்று கூறினார்.
மீண்டும் அடுத்தநாள் வாதத்தில் நீதிபதியையே சூடாக்கினார் குரோவர்.
குரோவர்," ஸ்பெக்ட்ரம் உரிமம் ஆவணங்களில் கையெழுத்துப் போட்டதாகவும், மனப்பூர்வமாக ஒப்புதல் தரவில்லை என்றும் அப்போதைய அரசு செயலாளர் மாத்தூரே கூறியுள்ளார்" என வாதிட்டார்.
இதனைக் கேட்ட கடும் கோபமடைந்த நீதிபதி சைனி," தொலைத் தொடர்பு துறையின் அரசு செயலர், கூடுதல் செயலர், சிறப்பு செயலர், உரிமங்கள் வழங்கும் இயக்குநர், துணை இயக்குநர் என அனைவருமே பதிவு செய்து ஆவணங்களில் கையெழுத்து போட்டுள்ளனர். அதைத் தான் ராசா ஏற்றுள்ளார்.
அப்படியானால் இந்தக் கோர்ட் ஆவணங்களை நம்ப வேண்டுமா அல்லது சி.பி.ஐ வழக்கு தொடர்ந்தப் பின் கோர்ட்டிற்கு வந்து நான் உடன்படவில்லை, வெறும் கையெழுத்து போட்டேன் என்ற வாய்மொழி சாட்சியை நம்ப வேண்டுமா?
அரசு செயலாளர் அமைச்சரவை செயலருக்கு தான் கட்டுப்பட்டவர். அமைச்சருக்கு அடிமை அல்ல. மனப்பூர்வமான ஒப்புதல் இல்லை என்றால் அதையாவது தன் குறிப்பில் பதிவு செய்திருக்கலாமே. அதை யாரும் தடுக்கப் போவதில்லையே. நிர்வாக சட்டத்தை படித்து விட்டு, இந்தக் கோர்டிற்கு உரிய ஆலோசனைகளை வழங்கும் விதத்தில் வாதங்களை வைக்க வேண்டும்" என்றார்.
நீதிபதியின் கிடுக்குப்பிடி கேள்விகளால் ஆடிப்போன சி.பி.ஐ வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் சிறிது நேரம் அமைதி காத்தார்.
பிறகு,"இந்த வழக்கில் கோப்புப் பதிவுகளையும் வாய்மொழி சாட்சியங்களையும் உங்கள் முன் வைத்துள்ளேன். முடிவு எடுக்க வேண்டியது கோர்ட் தான். முடிவுப் பற்றி கவலைப்பட போவதில்லை. யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ, அவர்கள் வெற்றி பெறட்டும் என்றார் குரோவர்.
அப்போது சட்டென எழுந்த ராசா,"ஆவணங்களையும், சட்டத்தையும் நம்புகிறேனே தவிர, அதிர்ஷ்டத்தை அல்ல" என பதிலடி தர கோர்ட் மீண்டும் பரபரப்பானது.
ஓராண்டாகவே வழக்கை சி.பி.ஐ இழுத்தடித்து வருகிறது. நீதிபதியே சி.பி.ஐ தரப்பைப் பார்த்து, " குற்றம் சட்டப்பட்டவர்கள் வழக்கை இழுத்தடிப்பது தான் வழக்கம். ஆனால் இந்த 2ஜி வழக்கை முடிக்கும் எண்ணம் இல்லாமல் நீங்கள் இழுத்தடிக்கிறீர்கள்" என்று கூறிவிட்டார்.
சி.ஏ.ஜி பரபரப்புக்காக கொடுத்த அறிக்கையை கொண்டு, அவகாசம் எடுத்து விசாரிக்காமல், அரசியல் நெருக்கடிக்காக பதிவு செய்த வழக்கால் தடுமாறுகிறது சி.பி.ஐ. பிதற்றுகிறார் அதன் வழக்கறிஞர்.
# நேர் நின்று மோதுகிறார் திரு. ராசா !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக