ஞாயிறு, 22 அக்டோபர், 2017

குஜராத்தில் மோடிக்கு ......... ஊர்வலம்!


நக்கீரன் : இமாச்சலப்பிரேசம், குஜராத் சட்டமன்றத் தேர்தல் ஒரே நேரத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், இமாச்சலப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் தேதியை மட்டும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தனது சொந்த மாநிலத்தில் பல்வேறு சலுகைகளை அறிவிப்பதற்காக குஜராத் தேர்தல் தேதி மோடிக்காக தள்ளிவைக்கப்பட்டது என குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் நாளை மோடி குஜராத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். பல்வேறு சலுகைகளை அறிவிப்பார் என்று செய்திகள் வெளியாகின. நாளை மோடி வரும் நிலையில் அவரை வரவேற்று பாஜகவினர் பதாகைகளை பல்வேறு இடங்களில் பிரமாண்டமாக வைத்துள்ளனர். ஆனால் மோடியின் வருகையை எதிர்த்து பொதுமக்கள் அவரது உருப்படம் உள்ள பதாகைகளை செருப்பால் அடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவுகின்றன. இதேபோல உருவபொம்மை ஒன்றில் மோடியின் படத்தை வைத்து அதனை பாடையில் தூக்கி செல்வது போன்ற காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவுகின்றன. சொந்த மாநிலத்தில் மோடிக்கு கிடைக்கும் மரியாதை இவ்வளவுதான் என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக