ஞாயிறு, 8 அக்டோபர், 2017

பெண்களையும் கோவில்களில் அர்ச்சகராக. .. கேரள அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

sukirtha.rani :பிராமணப் பெண்கள் உட்பட எல்லா சாதிப் பெண்களையும் கோவில்களில் அர்ச்சராகராக நியமனம் செய்வது குறித்தும் கேரள அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் திட்டத்தின்படி பயிற்சிபெற்ற 206 பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள் இன்னும் கோயில்களில் நியமிக்கமுடியாத நிலைமை.
ஆனால் கேரளாவில் 6 தலித்துகள் உட்பட பிராமணர் அல்லாத 36 பேர் அர்ச்சகர்களாக நியமனம். வரவேற்கத்தக்க நிகழ்வு. திருவிதாங்கூர் தெவசம் போர்ட்டுக்கும் கேரள அரசுக்கும் நன்றி.
தமிழ்நாட்டில் சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட சில அரசுப் பள்ளிகளில் தலித் சமையலர்கள் சமைத்த சத்துணவை தங்கள் குழந்தைகள் சாப்பிடுவதை விரும்பாத வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் அதற்கு எதிராகப் போராட்டம் நடத்தியது வரலாறு.
கேரளாவில் நியமிக்கப்பட்ட தலித் அர்ச்சகர்கள் தங்கள் கைகளால் தரும் பிரசாதத்தை வேறு சாதியைச் சேர்ந்த பக்தர்கள் வாங்கி உண்பார்களா என்னும் சந்தேகமும் எழுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக