சனி, 7 அக்டோபர், 2017

துனிசியா கால்பந்தாட்ட போட்டிக்கு தோடர் பழங்குடி மற்றும் ஒரு படுக இளைஞர்கள்.... நீலமலையில் இருந்து ,,

davamudhalvan.davan " நள்ளிரவு நேரம் அந்த இளைஞன் விம்மி அழுகிறான் .
அந்த வீரன் கண்ணீர் மல்க நன்றி தெரிவிக்கிறான்.
எதிர் முனையில் பேசும் அந்த மானுட நேசன்
"அழாதே முத்து நீங்க அழலாமா மகிழ்ச்சியாக போய் வாருங்கள் " என்கிறார் .
"இல்ல சார் என்னை சுற்றி இவளோ நல்லவங்களா ....இவ்வளோ பேர் எனக்காக வேலை செய்றிங்க " அவன் வெகு சிரமப்பட்டு அழுகையை கட்டுபடுத்திக் கொண்டு விமானம் ஏறுகிறான் அந்த வீரன் .
செப்டம்பர் மாதம் நீலமலைக்கு இரண்டாம் பருவம் . சாலையெங்கும் எல்லா நிறங்களிலும் பூத்துகுலுங்கும் மலர்கள் மலைகளில் பயணிக்கும்போது உங்கள் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் . விழியின் வழியாக நீங்கள் அடையும் மகிழ்வு இதுவென்றால் , செவி வழியாகவும் நாம் மகிழ இந்த நிகழ்வு உங்களுக்கு பயன்படலாம் .

கடந்த செப்டம்பர் மாதம் நீலகிரி மாவட்டத்திலிருந்து மூன்று பேர் கால்பந்தாட்ட போட்டிக்கு தமிழகம் சார்பில் விளையாட தேர்வாகினர் . தோடர் பழங்குடி இனத்தை சேர்ந்த நார்த்தேகுட்டன் ,நாஸ்முடிகுட்டன் ஆகிய இளைஞர்கள் இருவர் . மற்றும்தருண்குமார் என்கிற ஒரு படுக இளைஞர்.
அவர்கள் விளையாடப்போகும் நாடு எது தெரியுமோ துனிஷியா. மலையின் வனங்களுக்குள்ளும் , இருளுக்குள்ளும் ஒதுங்கி கிடக்கும் பழங்குடி ஊரிலிருந்து மூவர் கால்பந்தாட்ட போட்டிக்கு தேர்வாகியிருப்பது எத்தனை மகிழ்வான செய்தி. இந்த மலைகள் முழுதும் பூத்துள்ள அத்தனை மலர்களையும் அவர்கள் பாதங்களில் வைத்து ஆராதிக்க வேண்டிய செய்தி அல்லவா அது.
மூவரும் வெளிநாடு செல்ல தயாராகின்றனர். கடவுசீட்டுக்கு விண்ணபிக்கின்றனர் . எதிர்பாராத அந்த செய்தி நார்த்தேகுட்டனுக்கு வருகிறது .
கடந்த செப்டம்பர் மாதம் தன் உறவுகளோடு ஒரு நிகழ்வுக்கு சென்று இரவு ஊர் திரும்ப உதகை பேருந்து நிலையம் வந்து பேருந்து இல்லாமல் வெகு நேரம் நின்று அவர்கள் ஊர் வழியாக செல்லும் பேருந்தும் அவர்களை ஏற்றாமல் போகவே ..நிர்வாகத்தோடு வாய்த்தகராறு மாறி காவல்துறை வந்து எல்லோர்மீதும் வழக்கு பதிவு செய்கிறது. நார்த்தேகுட்டன்மீதும் ஓர் வழக்கு .
இந்த வழக்கின் காரணமாக நார்த்தேகுட்டனுக்கு கடவுசீட்டு மறுக்கபடுகிறது . இடி விழுந்ததைப்போல அவரது குடும்பம் ஆடிபோகிறது. மிக குறைவான நாளில் எப்படி கடவுசீட்டு வாங்குவது ? வழக்கை நடத்த வழக்கறிஞரை தேடுகின்றனர். இடையில் கடந்த மாதத்தில் வந்த தொடர் விடுமுறையில் நாட்கள் கழிகிறது.
அக்டோபர் மூன்றாம் தேதி வழக்குரைஞர் தோழர் விஜயனை வழக்கிற்காக அலுவலகம் வந்து பார்க்கின்றனர் . அன்றே அன்றே அவர் ஆஜராகிறார் . நீதி மன்றமோ வேறு முக்கியமான வழக்குகளை காரணம் காட்டி வழக்கை எடுத்துக்கொள்ள மறுக்கிறது . தோழன் விஜயனோ இலக்கை நோக்கி சொற்களை அம்பாய் எய்கிறார் . விவாதம் முற்றி காரசாரமான விவாதங்களுக்கு பிறகு , நீதிபதியின் கருணை , காவல்துறையின் 'துறையைத் தாண்டிய' உள்ளமும் இறங்கி நார்த்தே குட்டனுக்கு கடவு சீட்டு வாங்க அனுமதி நீதிமன்றம் மூலம் கிடைக்கிறது .
அதிகாரங்களையும் மீறி நார்த்தேகுட்டனுக்கு சக மானுடனாக நினைத்து பணியாற்றிய எல்லோருக்கும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாலருக்கும் கண்ணீர் மல்கும் சொற்களால் விஜயன் நன்றி கூறுகிறார் .
அடுத்த நாள் நாளாம் தேதி அலுவலகம் சென்று கடவுசீட்டு வாங்கி ஏலாம்தேதி இரவுக்கு மும்பைக்கு விமான சீட்டு கிடைக்கிறது . அங்கு சென்று அங்கிருந்து டெல்லி செல்கிறார்கள் . டெல்லியில் தோழன் விஜயனின் வார்ப்பான வழக்குரைஞர் இளவல் சபரிஷ் மற்ற உதவிகளை தமிநாடு கால்பந்து சங்க தலைவரோடு பேசி தயாராக இருக்கிறார் .
நாளை உலக மினி கால்பந்து போட்டியில் துனிசியாவில் மைதானத்தில் பழங்குடி இன இளைஞனின் பாதம் படபோகிறது. இந்தியாவிற்கும் செனகளுக்கும் போட்டி நடைபெறப்போகிறது.
அவர்கள் மூவரும் நமது சார்பாக விளையாடபோகிறார்கள். நாம் துனிசியாவை வரைபடங்களில் பார்த்திருப்போம் . அரிதாக கேள்விபட்டிருப்போம்.
முயற்சியால் அவர்கள் அந்த மைதானங்களை தொட்டிருக்கிறார்கள் .
மானுடம் மீது கொண்ட நேசத்தால் தோழர் விஜயன் சொற்கள் வழியாக அந்த மைதானத்தையும் நம்மையும் தொடுகிறார்.
அந்த நார்த்தே குட்டனின் கண்ணீர் எத்துனை கவித்துவமானது!
இது செவிக்கினிய செய்திதானே நண்பர்களே .
நான் நேற்று இரவு கேட்டேன். உங்களுக்கு இப்போது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக