வியாழன், 26 அக்டோபர், 2017

கந்து வட்டி வசூலிப்பவர்களின் பட்டியல்! மாமூல் அதிகாரிகள் பட்டியல் இருக்கிறதே ?

கந்து வட்டி வசூலிப்பவர்களின் பட்டியல்!கந்து வட்டியால் ஒரு குடும்பமே மின்னம்பலம்: உயிரிழந்ததையடுத்து நெல்லையில் கந்து வட்டி வசூலிப்பவர்களின் பட்டியலை தயாரிக்க ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் காவல் கண்காணிப்பாளர் அருண்சக்தி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 23 ஆம் தேதி காசிதர்மத்தை சேர்ந்த இசக்கிமுத்து கந்து வட்டி கொடுமையால் குடும்பத்துடன் தீக்குளித்து உயிரிழந்தார். இதையடுத்து கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

நெல்லை மாவட்ட ஆட்சியரும் கந்து வட்டி வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இந்நிலையில் நெல்லை மாவட்டம் முழுவதும் கந்துவட்டி வசூலிப்பவர்கள் குறித்த பட்டியலை தயாரிக்குமாறு இன்று (அக்டோபர் 26) அனைத்துக் காவல் நிலையத்துக்கும் காவல் கண்காணிப்பாளர் அருண்சக்தி உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின் பேரில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முறைப்படி நிதி நிறுவனமாகப் பதிவு செய்து வட்டிக்குக் கொடுக்கிறார்களா? அல்லது பதிவு செய்யாமல் மறைமுகமாக அதிக வட்டிக்குக் கொடுக்கிறார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக