ஞாயிறு, 15 அக்டோபர், 2017

குர்தாஸ்பூர் காங்கிரஸ் வெற்றி : 1,93,219 லட்சம் அதிகப்படியான வாக்குகளில் நாடாளுமன்ற இடைதேர்தல் ... பாஜகவின் தொகுதி .

Gurdaspur bypoll result: Congress' Sunil Jakhar wins by 1,93,219 votes
Mathi Oneindia Tamil : சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் லோக்சபா தொகுதிக்கான இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜாஹர் 1,93,219 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை வேட்பாளரை வீழ்த்தி மிக பிரமாண்ட வெற்றியைப் பெற்றார். பாஜக வசம் இருந்த இத்தொகையை காங்கிரஸ் கைப்பற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவின் வினோத் கண்ணா குர்தாஸ்பூர் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றார். கடந்த ஏப்ரல் மாதம் வினோத் கண்ணா காலமானார். s இதையடுத்து இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜாஹர் முன்னிலை வகித்தார்.வாக்கு எண்ணிக்கை முடிவில் சுனில் ஜாஹர் 1,93,219 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். பாஜக வசம் இருந்த தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக