தினகரன் : சென்னை: போயஸ் இல்லத்தில் செப்டம்பர் 22-ம் தேதி இரவு மயங்கிய நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்துள்ளதாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி அழைப்பு வந்ததும் 3 பேர் கொண்ட மருத்துவ குழு போயஸ் இல்லத்தின் முதல் தளத்திற்கு சென்றது. சராசரியாக 120/80 ஆக இருக்க வேண்டிய ரத்த அழுத்தம் 140/70 ஆக அதிகரித்திருந்தது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 120 எம்.ஜி. ஆக இருக்க வேண்டிய சர்க்கரை அளவும் 508 எம்.ஜி. என்ற அபாய நிலையில் இருந்துள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kalai Mathi o Oneindia Tamil சென்னை: ஜெயலலிதாவின் உடல்நிலை ஆபத்தான நிலைக்கு செல்லும் வரை அவரை போயஸ் கார்டனில் யாரும் கவனிக்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 72 நாட்கள் சிகிச்சைக்குப் பின் டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் எந்த நிலைமையில் செப்டம்பர் 22ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்த பேஷன்ட் கேர் ரிப்போர்ட் என்ற முதற்கட்ட அறிக்கையை புதிய தலைமுறை தொலைக்காட்சி இன்று வெளியிட்டது.
அதில் செப்டம்பர் 22ஆம் தேதி இரவு ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு 508 எம்ஜியாக இருந்தது தெரியவந்துள்ளது. அப்போது அவர் உடல் அசைவற்று மயக்கநிலையில் இருந்ததும் தெரியவந்துள்ளது. ஜெ.வின் கேர் டேக்கர் ஜெ.வின் கேர் டேக்கர் ஜெயலலிதா கடந்த 33 ஆண்டுகளாக தனது தோழியான சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களை மட்டுமே உடன் வைத்திருந்தார். ஜெயலலிதாவின் கேர் டேக்கராக இருந்தவர் சசிகலா.
மாநில முதல்வர் வீட்டில் ஏன் ஆம்புலன்ஸ் இல்லை?-
சசிகலா தனது கேர் டேக்கர் என ஜெயலலிதாவும் ஒருமுறை தனது பேட்டியின் போது தெரிவித்துள்ளார். சசிகலாவும் தனது முதல் அரசியல் உரையின் போது இதனை குறிப்பிட்டார். சாப்ட்டிங்களா அக்கா சாப்ட்டிங்களா அக்கா ஜெயலலிதா முதல்வராக கோட்டைக்கு செல்லும் போதெல்லாம் சாப்ட்டிங்களா அக்கா என உரிமையோடு கேட்டது தான் தான் என்றார். ஜெயலலிதாவுக்காகவே தனது 33 வருட இளமை காலத்தை அர்ப்பணித்ததாகவும் சசிகலா கூறினார்.
அப்படி ஜெயலலிதாவை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்ட சசிகலா, அவருக்கு சர்க்கரை அளவு 508 எம்ஜியாக அதிகரிக்கும் வரை என்ன செய்தார். ஜெயலலிதாவின் சர்க்கரை அளவு அதிகரிப்பதை அவர் கட்டுப்படுத்தவில்லை?
இரவு 10 மணி வரை காத்திருந்தது ஏன்? சர்க்கரை அளவை அவர் சோதித்திருந்தால், 508 எம்ஜி என்ற அபாய அளவுக்கு செல்வதை தடுத்திருக்க முடியும். ஆனால் கை,கால்கள் வீங்கி, இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகியவை ஆபத்தான நிலைக்கு சென்றபின் இரவு 10 மணிக்கு ஆம்புலஸை அழைத்ததேன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
முன்னரே ஏன் அழைத்து செல்லவில்லை?
தோழி கவனிக்கவில்லையா? அப்பல்லோ மருத்துவர்கள் போயஸ் கார்டன் சென்றபோது மயங்கிய நிலையில் உடல் அசைவற்று ஜெயலலிதா படுக்கையில் கிடந்துள்ளார். இவ்வளவு ஆபத்தான நிலைக்கு செல்லும் வரை ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் இருந்த அவரது தோழி சசிகலா உட்பட யாரும் கவனிக்கவில்லையா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதாவை கவனிக்காமல் விட்டிருந்தால் முன்னதாக போயஸ்கார்டனில் என்ன நடந்தது என்ற சதேகமும் எழுந்துள்ளது. இதையேதான் தமிழக பாஜக தலைவர் தமிழிசை திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் எழுப்பியுள்ளனர். அதிமுக தொண்டர்களின் கேள்வியும் அதுவாகவே உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக