வியாழன், 28 செப்டம்பர், 2017

உண்ணாவிரதம் ஒரு பிளாக் மெயில் போராட்ட யுக்தி ,,, ஏமாந்தது தலித் ,, ஏமாற்றியவர் காந்தி ...

அம்பேத்காரின் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக காந்தியார் மேற்கொண்ட உண்ணாவிரதம் ஒரு பிளாக் மெயில் போல தலித்துக்களை குறிவைத்து நடாத்தப்பட்ட மிகப்பெரிய மோசடி ! காந்தியின் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் அன்று தலித்துக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டிருப்பார்கள். எனவே அம்பேத்கார் வேறு வழியின்றி காந்தியோடு சமரசம் செய்துகொண்டார். ... ஒரு கருத்து வாதத்தை திசை திருப்பி உணர்ச்சியை கிளறி இரத்தத்தை வெள்ளம் ஓடவிடுவதை எப்படி மனித நேயம் உள்ளவர்கள் ஏற்று கொள்ள முடியும் ? மறக்க நினைக்கும் கேள்விகள் மீண்டும் மீண்டும் மறக்கவோ மறுக்கவோ முடியாதவாறு எழுந்து கொண்டேதான் இருக்கும் .. அதுதான் அறம். எப்படியாவது மக்களின் உணர்ச்சியை கிளறி நாட்டில் இரத்த ஆறு ஒடசெய்வற்கு உண்ணாவிரத்தை ஒரு ஆயுதமாக பாவிக்கும் பயங்கரவாதத்தை ஆரம்பித்து வைத்தது குஜராத் காந்திதான் ., உண்ணாவிரதம் ஒரு அகிம்சையே அல்ல .. அது மக்களை உணர்ச்சிவசப்பட செய்யும் ஒரு ஆயுதம் , மக்களை வீதிக்கு வரவைத்து அதன் மூலம் நாட்டில் வன்முறையை உருவாக்கி அதன் மூலம் தனது நோக்கத்தை நிறைவேற்ற முயற்சிப்பது ஒரு பயங்கரவாதம்தான் .. அதை அகிம்சை என்பது ஒரு மோசடி ,.. இந்த உண்ணாவித தந்திரத்திற்கு காப்பி ரைட் உரிமை எம்.கே.காந்திக்கு உரியது. .. இனியாவது நேர்மையாக வரலாற்று தவறுகளை சீர்தூக்கி பார்த்து சுயசீர்த்திருத்தம் மேற்கொள்வது அவசிய தேவையாகும் . அறிவலாளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக