வியாழன், 14 செப்டம்பர், 2017

புதுகோட்டை ONG எண்ணெய் கிணற்றில் தீ !

புதுக்கோட்டை மாவட்டம் நல்லாண்டார் கொல்லையில் ஓ.என்.ஜி.சி.
நிறுவனம் அமைத்துள்ள எண்ணெய் கிணறு ஒன்றில் இன்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. புதுக்கோட்டை: ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றில் திடீர் தீ விபத்து புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நல்லாண்டார்கொல்லையில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எண்ணெய் கிணறு ஒன்றில் இன்று திடீரென தீ பிடித்தது. தீ பிடித்ததால் ஏற்பட்ட புகை வானத்தில் கருமேகமாக சூழ்ந்தது. மக்கள் வசிப்பிடத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றில் தீ விபத்து ஏற்பட்டதை கேட்டு வட்டாட்சியர் அங்கு விரைந்து வந்தார். அங்கு கூடியிருந்த மக்களிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து அந்த பகுதியில் உள்ள எண்ணெய் கிணறுகளை மூட வேண்டும் எனக்கோரி பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டனர். மேலும், அந்த பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி எண்னெய் கிணற்றில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.  மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக