ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

பார்ப்பனர்களுக்கு சட்டப்படி corrupt செய்ய தெரியும்... NEET ஒரு சட்டப்படி தில்லாலங்கடி திருட்டு!

வாசுகி பாஸ்கர் : உலகம் முழுக்க மத நிறுவனங்களின் பிடியில் தான் பொருளாதாரமும், அரசும், சமூக கட்டமைப்பும் இருக்கிறது, இது எப்படி சாத்தியமாகிறது என்பது பெரிய சப்ஜெக்ட். அது விட்டுடுவோம், தமிழ்நாட்டிலேயே   எடுத்துக்கொள்ளுங்கள், காஞ்சி காமகோடி பீட கிளைகளுக்கு சொந்தமாக கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், நிறுவனங்கள் என்று விஸ்தரித்து அவர்தம் சார்ந்தவர்களுக்கு பயன்படும் படி முன்னுரிமை கொடுக்கப்படுகிறது, அதனால் பலனடைகிறவர்களும் அதிகம்.
தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய கிடைத்த மிக நீண்ட கால வாய்ய்ப்பை திராவிட அரசியல்வாதிகள் அப்படியான நிறுவனங்களை நிறுவ தவறி விட்டார்கள் என்றே சொல்வேன். கல்வியால் நிகழ்ந்த சாதனைகள் அசாதாரணமானது தான், யாரும் மறுப்பதற்கில்லை, ஆனால் தமிழ்நாட்டை போல ஒரு மாநிலத்தில் கடவுள் மறுப்பு, முற்போக்கு, விளிம்பு நிலை மனிதர்களுக்கான அரசியல் பேசி நீண்ட காலமாக மக்களிடையே அங்கீகாரத்தை பெற முடிந்த இயக்கங்கள், கட்சிகள் இந்தியாவுக்கே முன்னோடி, ஏன் உலகத்துக்கே முன்னோடி என்று கூட சொல்லலாம்.

அந்த வாய்ப்பை இன்னும் ஆழப்படுத்தி, அதற்கான பணிகளை செய்திருந்தால், மாவட்டம் தோறும் கல்வி மையங்களை வைத்து பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பயன்பெறும் வகையில் பல உதவிகளை செய்திருக்கலாம்.
இங்கே தான் நாம் கோட்டை விடுகிறோம், படித்து முன்னேறியவர்களும் முன்னேறினால் போதும் என்று அடுத்தகட்டத்துக்கு நகர்ந்து விடுகிறார்கள், ஆன்மிகம் ஒரு organized society யாக இருக்கிறது, அவர்களுக்குள் உதவி செய்து கொள்கிறார்கள், அதற்கு இடையூறு ஏற்படாதவாறு இந்த corrupted சிஸ்டத்தில் எப்படி ஜீவிப்பது என்கிற தில்லாலங்கடி வேலைகளை அறிந்து, இன்வெஸ்ட்மெண்டுகளை சாமர்த்தியமாக இன்வெஸ்ட் செய்கிறார்கள்.
பச்சையாக சொல்லவேண்டுமானால் பார்ப்பனர்களுக்கு எப்படி ஒரு சிஸ்டத்தை லீகளாக corrupt செய்வதென்பது தெரியும்.
இனவாதம், மதவாதம், சாதியவாதம் காலூன்றி இருப்பதை போல, முற்போக்கு சித்தாந்தத்தால் ஒன்றிணைந்து இருக்க முடிவதில்லை, கொஞ்சம் முன்னேறினாலும் மைய நீரோட்டத்தில் கலந்து வேறு ஒருவராக நிறுவி கொள்கிறார்கள்.
பெரியாரிஸ்ம் அப்டேட் ஆகவேண்டும் என்று நா கூசாமல் பேசுகிறார்கள், தோசையாக இருந்தாலும் பீஸாவாக இருந்தாலும் டாப்பிங்ஸ் தான் மாறுபடும் ஒழிய பார்ப்பனியத்தின் முகம் என்றுமே ஒன்று தான், அது மாறப்போவதே இல்லை.
இதை மட்டும் கொஞ்சம் உணர்ந்து குழுமமாக இருந்தால், தலைமை அமைந்தால், எதிரியை அழித்து விடலாம் என்று சொல்ல மாட்டேன், ஜீவிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக