வியாழன், 7 செப்டம்பர், 2017

நீட் தேர்வை எதிர்த்து ஆசிரியை சபரிமாலா பதவி விலகினார் ! 7 வயது மகனுடன் சேர்ந்து போராடியவர் ..


நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டி போராடிய ஆசிரியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவப் படிப்பில் சேருவதற்கான பொதுநுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வைரபுரம் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை சபரிமாலா, தனது 7 வயது மகனுடன் சேர்ந்து நீட் தேர்வுக்கு தடை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று அவர் தனது ஆசிரியை பணியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இவர், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை போராட்டத்தில் ஈடுபடப்போவதகாவும், அதற்காகவே தனது பணியை ராஜினாமா செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தை மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரியிடம் முறைப்படி அவர் வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக