வியாழன், 7 செப்டம்பர், 2017

சங்கராச்சாரி :புத்திசாலிங்களுக்கு பிளஸ் 2 படிப்பே போறுமே? அவாளுக்கு எதுக்கு மேற்படிப்பு? flashback!

Venkat Ramanujam · தமிழ் பெண் அனிதாவின் மரணம் எல்லாரையும் பேச வைத்து விட்டது பள்ளி மாணவர்களை கூட தெருவுக்கு போராட வர செய்து விட்டது சரியான நேரத்தில் உண்மையை போட்டு உடைச்ச Rajagopal Meenatchisundaram அண்ணனுக்கு நன்றிகள் ஆயிரம்:
Rajagopal meenadchisundaram : : விஜயகாந்த் முன்பு  சங்கராச்சாரியை சந்தித்த போது சங்கராச்சாரி விஜயகாந்திடம் அவரது கல்லூரியில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் பற்றி கேட்டார், அதற்கு விஜயகாந்த் : சிலருக்கு சலுகை அடிப்படையிலும் சிலரை இலவசமாகவும் சேர்த்து கொள்வதாக பதிலழித்தார்,
அதற்கு சங்கராச்சாரி ,"  எதுக்கு வித்தையை தானமா கொடுக்கிறேள்? தட்சணை வாங்கிக்கொண்டுதான் வித்தையை கொடுக்கவேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்றது .ஃபீசை  குறைக்கிறதோ தள்ளுபடி செய்யறதோ கூடாது . நான் எனாதூர்ல அப்படித்தான் கொடுக்கிறேன்.
விஜயகாந்த் : இல்லை நல்ல படிக்கிற பசங்களுக்கு இலவசமா கொடுக்கலாம்னு நெனச்சேன்!
சங்கராச்சாரி : படிக்கிறதுக்கு தட்சணை கொடுக்க முடியல்லன்னா அவா படிக்க வேணாமே? நல்ல மார்க் வாங்கிற புத்திசாலிங்களுக்கு பிளஸ் 2 படிப்பே போறுமே?  அவாளுக்கு எதுக்கு மேற்படிப்பு?
இதுதாண்டா இந்துத்வா கலாசாரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக