Saravanan Anna Durai : நீதிபதி ஜெயந்த் படேல்.... நேர்மையாளர், எந்த சக்திகளுக்கும் அடி பணியாமல் குஜராத் உயர் நீதி மன்றத்தில் பணியாற்றி வந்தவர். கர்நாடகா நீதி மன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக நேற்று வரை இருந்தார், இன்று ராஜினாமா செய்து விட்டார்! இவரை தலைமை நீதிபதியாக நியமிக்காமல் இவரை விட தகுதி பட்டியலில் கீழே உள்ளவரை தலைமை நீதிபதியாக நியமித்திருக்கிறது உச்ச நீதி மன்றம்.
அப்படி என்ன தவறு செய்து விட்டார் இவர்?
குஜராத் உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக இருக்கும் பொழுது, நம்முடைய அமித் ஷா சம்மந்தப்பட்ட இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார். அந்த வழக்கிற்காக இப்பொழுது பழி வாங்கபட்டிருக்கிறார் நீதியரசர் ஜெயந்த் படேல்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக