தினமலர் : ஜெத்தா: சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதியளித்து அந்நாட்டு அரசர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.
சவுதி அரேபியா நாட்டில் பெண்கள் வாகனங்கள் ஓட்ட அனுமதியில்லாமல் இருந்தது. இதற்கு பல்வேறு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இது பெண்கள் சுதந்திரத்தை பறிக்கும் செயலாகவும் பார்க்கப்பட்டது. பல உலக மீடியாக்களில் இந்த விவகாரம் பல சமயங்களில் விவாதப்பொருளானது.
இந்நிலையில் தற்போது சவுதி அரசர் சல்மான் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் சவுதியில் பெண்கள் வாகனங்கள் ஓட்ட இனி தடையில்லை எனவும், பெண்களுக்கு வாகனம் ஓட்ட இனி லைசன்ஸ் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது வரும் 2018 ம் ஆண்டு ஜுன் மாதம் மாதம் முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்ட தடை என்ற எந்த சட்டமும் இல்லை எனவும், இஸ்லாமிய மார்க்கத்திலும் பெண்கள் வாகனம் ஓட்ட தடை என எந்த இடத்திலும் கூறப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இத்தகவலை அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக