ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

ஒன்றரை கோடி தொண்டர்களும் எங்கள் பக்கம் : தீபா

ஒன்றரை கோடி தொண்டர்களும் எங்கள் பக்கம் : தீபாஅதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் என் பின்னால் உள்ளனர். அதை விரைவில் புரிந்துகொள்வீர்கள், இரண்டு அணிகளை பற்றியே பேசுகிறார்கள், ஆனால் மூன்றாவது எங்கள் அணி என்று ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மருத்துவமனையில் நாங்கள் ஜெயலலிதா பார்க்கவில்லை என்று கூறியிருப்பதன் மூலம் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகம் இன்னும் வலுப்பட்டுள்ளது. இவருக்கு பதிலளித்த தினகரன்,"அக்டோபர் 2 முதல் நோய்த்தொற்று ஏற்படும் என்பதால் ஜெயலலிதாவை பார்க்க மறுத்தவர்கள் சசிகலாவுக்கு அனுமதியளிக்கவில்லை. ஜெ. சிகிச்சை பெற்ற சிசிடிவி காட்சிகள் எங்களிடம் உள்ளன. விசாரணை ஆணையத்தில் அதை ஒப்படைப்போம்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் இன்று ( செப்டம்பர் 24) தினந்தந்தி நிறுவனர் பா.சிவந்தி ஆதித்தன் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின்,செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா," ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவோம் என இப்போது கூறுவது ஏன்?. சிகிச்சை பெற்ற சிசிடிவி காட்சிகளை வெளியிடுவோம் என்று கூறுபவர்கள் இத்தனை நாட்களாக என்ன செய்துகொண்டிருந்தனர்.
எனவே ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆழமான சந்தேகம் நிரூபணமாகியுள்ளது. ஆனால் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற காட்சிகளை வெளியிட்டாலும், இல்லை என்றாலும் வழக்கு தொடர்வது உறுதி.
நான் அரசியலுக்கு வருவதற்கு முக்கிய காரணம் அதிமுக தொண்டர்கள்தான். அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் என் பின்னால் உள்ளனர். அதை விரைவில் புரிந்து கொள்வார்கள். மாறி மாறி இரண்டு அணிகளைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். ஆனால் மூன்றாவதாக அதிமுக ஜெ.தீபா அணி என்று உருவாக்கியுள்ளோம். நாங்கள் யாருடன் இணைகிறோம் என்பதல்ல.எங்களுடன் யார் இணைகிறார்கள் என்பதே முக்கியம்" என்று தெரிவித்துள்ளார். minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக