வெள்ளி, 1 செப்டம்பர், 2017

உமா பாரதி உட்பட.. பல மத்திய அமைச்சர்கள் பதவி விலகல்

டெல்லி: மத்திய திறன் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் பதவியை ராஜீவ் பிரதாப் ரூடி ராஜினாமா செய்துள்ளார். உத்தரபிரதேச பாஜக தலைவராக மகேந்திர நாத் பாண்டே நியமிக்கப்பட்டதால் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்துள்ளார். மேலும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று மதியம் மத்திய மந்திரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் மந்திரிசபையை மாற்றி அமைக்க ஏதுவாக மத்திய மந்திரிகள் ராஜீவ் பிரதாப் ரூடி, மகேந்திர நாத் பாண்டே ஆகியோர் நேற்று இரவு திடீரென தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனிடையே மத்திய மந்திரிகள் ராதா மோகன் சிங், கல்ராஜ் மிஸ்ரா, சஞ்சீவ் குமார் பல்யாண், நிர்மலா சீதாராமன், கிரிராஜ் சிங் ஆகியோரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக