புதன், 20 செப்டம்பர், 2017

காமகொடூர மகனை கூலிப்படையை வைத்து கொன்ற தாய்! மகாராஷ்டிரம்

கூலிப்படை ஏவி  மகனைக் கொன்ற தாய்!
மின்னம்பலம் :உறவினர்கள் உட்பட 12 பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த மகனைத் தாயே கூலிப்படையை ஏவி, கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்திருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகிலுள்ள பயந்தர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்சரண் ராம்தாஸ். வயது 21. மதுப் பழக்கம் உடையவர். சிறுவயது முதல் இவருக்கு தகாத பழக்கங்கள் இருந்துள்ளன. இந்த நிலையில் ராம்சரண் உறவினர்கள் உள்பட 12 பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் பல பெண்களை பிளாக் மெயில் செய்திருக்கிறார். அவர்களுக்குத் தொடர்ந்து மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடுமை செய்து வந்துள்ளார். இதையறிந்த தாய் தன் மகனைத் திருத்த பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆனால் ராம்சரண் திருந்துவதாக இல்லை. மேலும் ஒருநாள் தன் தாயையே பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியிருக்கிறார் ராம்சரண். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய், அவரைக் கொலை செய்ய முடிவெடுத்தார். கூலிப்படைக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து, ராம்சரணை வாசி என்ற இடத்துக்கு வரவழைத்து கழுத்தை அறுத்துக் கொன்றனர். இதையடுத்து கொலை செய்யத் தூண்டிய ராம்சரணின் தாய் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேரை நேற்று 19.9.2017 காவல்துறையினர் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக