புதன், 20 செப்டம்பர், 2017

லக்ஷ்மி: அரசே அறிமுகப்படுத்தும் ரகசிய நாணயம்! (கள்ளகாசு)



லக்ஷ்மி: அரசே அறிமுகப்படுத்தும் ரகசிய நாணயம்!மின்னம்பலம் : இந்திய  அரசு ரகசிய நாணயங்களை அனுமதிப்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. ஏற்கெனவே மறைமுகமாக பிட்காயின் போன்ற ரகசிய நாணயங்கள் புழக்கத்திலிருந்து வருகின்றன. உலகம் முழுவதும் இதுபோன்ற ரகசிய நாணயங்களின் பயன்பாடு பலமடங்கு அதிகரித்துவரும் சூழலில் இந்தியாவில் அரசே இதை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அரசு அறிமுகப்படுத்தவுள்ள இந்த ரகசிய நாணயத்துக்கு லக்ஷ்மி என்று பெயர்வைத்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சீனா மற்றும் ரஷ்யாவில் பிட்காயின் பரிவர்த்தனைக்குத் தடையும், ஒழுங்குமுறையும் வகுத்துள்ளது. பிட்காயின் பயன்பாட்டில் தென்கொரியா முக்கிய பங்கு வகிக்கிறது. அங்கு சிலர் சட்டவிரோதமாக பிட்காயின் உரிமை பெற்றிருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த பைத்தியம் எல்லா இடத்தையும்  பிராண்டி வைக்கும்

இதுபோன்ற நடவடிக்கையால் பிட்காயின் பாதுகாப்பற்றது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்திலும் ரிசர்வ் வங்கி பிட்காயின் பரிவர்த்தனைகள் சிரமமானதென்று அதை பயன்படுத்துவோருக்கு எச்சரித்திருந்தது. 2016ஆம் ஆண்டுக்கான ‘டிரேக் இன் ரிப்போர்ட்’ அறிக்கையின்படி 50,000க்கும் அதிகமானோர் பிட்காயின் பயன்படுத்துவதாகத் தெரிவித்திருந்தது. இந்தச் சூழலில் இதில் நிலவும் பல்வேறு முறைகேடுகளைத் தடுக்க அரசே ரகசிய நாணயங்களை அறிமுகப்படுத்த முயற்சித்து வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக