திங்கள், 4 செப்டம்பர், 2017

அனிதாவுக்கு அஞ்சலி செலுத்த பாமக தயாரில்லையா?


அனிதாவுக்கு அஞ்சலி: தவிர்த்த பாமக!நீட் தேர்வுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி அதில் நீதி கிடைக்காததால், மனவேதனையில் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலகினரும், பொதுநல அமைப்பினரும் நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தினர்.
நீட் தேர்வுக்கு எதிராக தற்கொலை செய்துகொண்ட அனிதா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பாமக தலைவர்கள் செல்ல வேண்டுமென பாமக தலைமைக்கு, அக்கட்சியின் சமூக வலைதளக் குழுவினர் வாட்ஸ்அப் மூலமாக தகவல் தெரிவித்தனர். ஆனாலும் பாமக தலைமை அமைதியாகவே இருந்தது. ஆகவே பாமக சமூக வலைதளக் குழுவில் உள்ளவர்கள் அனிதா உடலுக்கு கட்சித் தலைமையிலிருந்து அஞ்சலி செலுத்தப் போக வேண்டும் என்று கருத்துகளை பதிவுசெய்து வந்தனர்.

அனிதாவுக்கு அஞ்சலி செலுத்த பாமக தலைவர்கள் வராதது குறித்து நாம் விசாரிக்கும்போது, “சமீபகாலமாக பாமக தலைவர்கள் துக்கச் சம்பவங்களுக்கு போகாமல் தவிர்த்து வருகின்றனர். உதாரணமாக விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார் மறைவுக்கும் செல்லவில்லை.
அதுவும் அரியலூரில் ஏதாவது நிகழ்வு என்றால் தவிர்த்து விடுகின்றனர். சமீபத்தில்கூட பாமக வழக்கறிஞர் பாலுவின் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்காக அன்புமணியை அழைத்திருந்தனர். ‘அரியலூர் மாவட்டமா? அங்கே ஏன் அவ்வளவு ரிஸ்க் எடுத்துப் போகணும்? தேவையில்லாத பிரச்னைகள் வேண்டாம்’ என்று தவிர்த்தார் அன்புமணி.
‘அனிதா தற்கொலை செய்தியை சோசியல் மீடியாவில் முக்கியத்துவம் கொடுத்து அதிகப்படுத்துங்கள்’ என்றார் அன்புமணி, அதேபோல் மத்திய அரசு, மாநில அரசு, திமுக, காங்கிரஸ், அனைவரும் நீட் தேர்வு வருவதற்குக் கூட்டு முயற்சி செய்தவர்கள் என்று அனிதா மரணத்தைப் பற்றி சோசியல் மீடியாக்களில் செய்திகள் அதிகமாகப் பகிர்ந்தோம். அனிதா உடலுக்கு அஞ்சலி செலுத்துவதை அன்புமனி தவிர்த்தது பற்றி விரைவில் சரியான காரணத்தை அன்புமணி தெரிவிப்பார்” என்கின்றனர் பாமக தரப்பிலிருந்து.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக