திங்கள், 18 செப்டம்பர், 2017

ஜெயலலிதா ஏன் அழகிரியை எதிர்த்தார் ... செல்லூர் ராசு தகவல்


மின்னம்பலம் திமுக செயல்தலைவர்
அழகிரியை புகழும் அமைச்சர் !ஸ்டாலினை விட அழகிரி திறமையானவர் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்து எடப்பாடி அணிக்கும் தினகரன் அணியும் தினந்தோறும் கருத்து மோதல் நடந்துகொண்டிருக்கிறது. தற்பொழுது நடைபெறும் எடப்பாடி தலைமையிலான ஆட்சி பெரும்பான்மையை இழந்து விட்டது ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரிடம், திமுக மனு கொடுத்தும்,ஆளுநர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் நீதிமன்றத்திலும் திமுக வழக்குத் தொடுத்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் செப் 20 ஆம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பிற்குத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நேற்று திண்டுக்கலில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய ஸ்டாலின்," நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வராவிட்டால், பெருமளவில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்"என்று தெரிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் இன்று(செப்டம்பர் 17) மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ,"முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அழகிரியைத்தான் எதிர்த்தார். ஜெயலலிதா ஒருவரை எதிர்க்கிறார் என்றால் அதற்குக் காரணம் இருக்கும், எந்தப் பதவியிலும் இல்லாத போதும் மதுரையில் சிறப்பாக செயல்பட்டவர் அழகிரி.
ஸ்டாலினுக்கு பதிலாக அழகிரி இருந்திருந்தால் அதிமுகவிற்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியிருப்பார். இப்பொழுது எதிர்க்கட்சி வலுவற்றிருப்பதால் எங்களுக்கு எந்தச் சிக்கலும் ஏற்படுத்த முடியாது' என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக