பீகார் மாநில எம்.பி முகமது தஸ்லிமுதீன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முகமது தஸ்லிமுதீன் கடந்த 26-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற லோக்சபா கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவருக்குச் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று (செப் 17) மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் இன்று இரவு சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
மறைந்த முகமது தஸ்லிமுதீனுக்கு வயது 74, அவர் பீகார் மாநிலத்தில் உள்ள ஆராரியா லோக்சபா தொகுதியின் உறுப்பினராக இருந்து வருகிறார். ஏழு முறை பீகார் சட்டமன்ற உறுப்பினராகவும் , ஐந்து முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் தேவகவுடா பிரதமராக இருந்த போது மத்திய உள்துறை இணையமைச்சராகவும் இருந்தார்.
முகமது தஸ்லிமுதீன்க்கு அஸ்ரத் பேகம் என்ற மனைவியும் மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். மின்னம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக