வெள்ளி, 15 செப்டம்பர், 2017

சாரணர் இயக்கதுக்குள் நுழைய எச்.ராஜா துடிப்பது ஏன்?

நதிகளை இணைப்பதற்கு மிஸ்டுகால் கொடுங்கள் என்கிற சாமியார் ஜக்கிவாசுதேவ்  முன்வைத்த 80009 80009 என்ற எண் ஏற்கனவே பா.ஜ.கவின் மிஸ்டுகால் திட்டத்திற்குப் பயன்படுத்திய எண்தான். நதிஇணைப்பு என்ற பெயரில், மிஸ்டுகால் செய்பவர்களின் தரவுகளைப் பெற்று அவர்களை பா.ஜ.க.வில் இணைப்பதற்கான வேலைகள் ஈஷா தரப்பில் மறைமுகமாக நடந்துவருகின்றன. அதுபோலவே, சாரணர் இயக்கத்தில் உள்ள மாணவர்களையும் பா.ஜ.க. பக்கம் திருப்புவதற்கான திட்டங்களும் தீட்டப்பட்டுள்ளன. சாரணர் இயக்கம் போலவே இந்திய செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்டவற்றிலும் ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் ஊடுருவி வருகின்றனர். தன்னார்வலர்கள் நிறைந்த சுயேட்சை அமைப்பாக சாரணர் இயக்கம் இயங்க வேண்டும் என்பதுதான் அதை நிறுவியவரான பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி பேடன் பவலின் கொள்கை. (மேலும் விவரமாக இன்றைய நக்கீரனில்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக