சனி, 2 செப்டம்பர், 2017

மோதியே வீழ்த்துவோம் அனிதா! விடமாட்டோம்! சமுகவலையில் ....

மத்த ஸ்டேட்காரங்கள்லாம் கம்முன்னு இருக்கும் போது இந்த தமிழ்நாட்டு காரங்க மட்டும் தான் நீட் வேணான்னு உயிரைவிடுறாங்க. சரியான மொழி வெறியனுங்க’ன்னு அடுத்த ஸ்டேட்காரங்க சொல்றதைவிட இங்க உள்ள சில டிக்கெட்டுகளும் சொல்லிக்கிட்டு திரியுறாங்க. மாநில சுயாட்சி வேணும்னு 60 வருசமா பேசுறவங்கய்யா நாம. 50 வருசத்துக்கு முன்னாலேயே இந்தியை எதிர்த்தவங்க. இப்ப தான் கர்நாடகக்காரங்களுக்கு அது புரிய ஆரம்பிச்சுருக்கு. கொஞ்சம் கண்ணை திறந்து பார்த்தா மத்த ஸ்டேட்டை விட வளர்ச்சியிலயும் சமூக நீதிலேயும் நாம 50 வருசம் முன்னால இருக்கோம்னு தெரியும். இந்த நீட்டோட பாதிப்பு எவ்வளவு மோசமாயிருக்குங்கிறதை அவங்க பீல் பண்ணும் போது வைத்தியம் பார்க்க வசதியில்லாம பாதிபேர் பரலோகம் போயிருப்பாங்க. அந்த பச்ச புள்ள உசுர குடுத்து இத உணர்த்திட்டு போயிருக்கு. இன்னும் ஒரு குரூப்பு ‘அந்த புள்ள இஞ்சீனியருக்கு படிச்சுருக்கலாம்ல’ன்னு கிளம்பி வருது. அவங்களுக்கு இந்த குமாரை விட அப்டேட் தான் சரியா பதில் சொல்லும்.

மெத்த வீட்டான்
நீட் தேர்வோடு புறக்கணிக்கப்படவேண்டியது தமிழிசை , H.ராஜா, டாக்டர் கிருஷ்ணசாமி வகையறாக்களின் பேட்டி ,போராட்டம் எதையும் காட்டாத தந்தி டிவி...!
vishnut
பகல்ல தெருவிளக்கு எரிஞ்சா கண்டுக்க மாட்டேங்கிறான்
டூவீலர் லைட் எரிஞ்சா தெருவுக்கு 10பேராவது லைட்ட அணைக்க சொல்லிறானுக
என்ன ஒரு மின் சிக்கனம்

jroldmonk
எப்போதிலிருந்து இந்த கல்விமுறை தரமற்றதாகி நீட் தேவைப்பட்டது?
அனிதாக்கள் இதில் 1176 மதிப்பெண்கள் எடுத்துவிட முடிகிறது என அறிந்த போதிலிருந்து
HAJAMYDEENNKS
நம்பவைத்து கழுத்தறுப்பதில் கசாப்கடைக்கார் தோற்றார் மத்திய மாநில அரசுகளிடம்...!
#NeetKillsAnitha
iParisal
டியர் கூகுள், ஜிமெய்ல் ஆரம்பிக்கும்போது, கேட்கும் Nationalityயில் Anti Indian சேர்க்கவும். புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்புக்கு நன்றி.

RealMan
முதல் அமைச்சர்..MLA எல்லாத்தையும் பதவி விலக சொல்லுங்க... எல்லாரும் EXAM எழுதி பாஸானப்புறம்.. ஒட்டு கேட்க வரட்டும்..அப்றம் ஆளட்டும்
DhasthanSatham
இறந்தது ஒரு உயிர் அல்ல,ஓராயிரம் உயிர்க்களை காப்பாற்ற நினைத்த உயிர்
#RIPDOCTORANITHA
Lokshii
பாடசாலை இனி தேவையில்லை உனக்கு
பாட்டு கச்சேரி இருந்தாலே போதும் இந்த நாட்டிற்கு

priya
"தகுதியற்ற" அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்துவிட்டு
"தகுதி" யுள்ள ஒரு மருத்துவரை இழந்துவிட்டோம் ....
Kozhiyaar
இன்னும் 2 வாய்ப்பு இருக்கிறதே என்கிறார்கள் சில அறிவாளிகள்!
2 வாய்ப்பு என்பது 2 ஆண்டுகள்!
தினக்கூலி குடும்பத்திற்கு இரண்டு யுகங்கள்!
#Anitha
ImRoboSankar|
சுட்டு கொன்னா #தமிழக மீனவர்
தற்கொலைனா #தலித் மாணவி
பதக்கம்னா மட்டும் #இந்தியன்

HAJAMYDEENNKS
மாணவர்கள் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி #
அதுக்கு ஒரே வழி உங்க ராஜினாமாதான்...!
மெத்த வீட்டான்
அரசாங்கத்தோடு நடந்த உரிமை மீட்பு போரில் வீரமரணம் அடைந்திருக்கிறார் அனிதா..!
அசோக் குமார் தவமணி
நூல் அறுத்த பட்டம்
அனிதா
- கவிஞர் அறிவுமதி

Deepa Janakiraman
இன்னும் போராடியிருக்க வேண்டும் என்கிறார்கள்..இறுதி வரை அவள் நின்றது போராட்டக் களத்தில் தான் என்பதை புரிந்து கொள்ளாமலேயே..
Baashhu
கேரள முதல்வர்லாம் தமிழ்நாட்ட வச்சுதான் கேரளாவையே ஆட்சி பண்ணுறார்.என்னலாம் பண்ணக் கூடாதுன்னு இங்கருந்து கத்துகிட்டு அதமட்டும் பண்ணுறதில்ல
thooyon
ஒரு விசயம் மட்டும் எனக்கு புரியவே இல்ல கல்வி இட ஒதுக்கீடுல மட்டும் எல்லாரும் சமம்ன்றானுக மத்த விசயத்துல எல்லாம் அவனுகதான் ஒசத்தின்றானுக..

நக்கல் மன்னன் 2.0
டிவில அனிதா நியூஸ் பாக்கும்போது கண்கலங்குற பெண்களையும் கோபப்டுற ஆண்களையும் நிறையா பாக்குறேன்
பயங்கர கோபம் வந்தும் ஒண்ணும் செய்ய முடியாத நிலைமை ல இருக்கோம்
shaitboy
ஒருநாள் ஏன் #NEET ஐ அறிமுகப்படுத்தினோம் என்று இதே தமிழ்நாடு மாணவர்கள் மத்திய அரசை கதற விடுவார்கள்...அது தான் அனிதாவுக்கு அஞ்சலி!

கருப்பு கருணா
எம்மை உயிரோடு வாழவிடும் இரக்கம் உம்மிடமில்லை... ஆயினும்... உம்மை உயிரோடு எரிக்கும் கொடூரம் எம்மிடமில்லை..!
மோதியே வீழ்த்துவோம்...!
மோதியை வீழ்த்துவோம்..!
-லாக் ஆஃப் மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக