சனி, 2 செப்டம்பர், 2017

அனிதாவுக்கு அமெரிக்காவில் அஞ்சலி கூட்டங்கள் வாஷிங்டன் , அட்லாண்டா, நியூ ஜெர்சி, டெட்ராய்ட், டல்லாஸ், செயிண்ட் லூயிஸ், நெவார்க்(டெலவர்)

American Tamils organize candle light vigil for Anitashankar. Oneindia Tamil வாஷிங்டன்(யு.எஸ்): நீட் தேர்வினால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத, பள்ளி மாணவி அனிதாவின் மரணம் அமெரிக்காவில் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது. இன்று சனிக்கிழமை மெழுகுவர்த்தி ஏந்தி இரங்கல் கூட்டங்கள் நடைபெற உள்ளது. நீட் தேர்வு மூலம் , தமிழக மாணவர்களுக்கு பெரும் தீங்கிழைக்கப் பட்டுள்ளது. இந்த ஆண்டு விலக்கு கிடைக்கும் என்று நம்ப வைத்து மத்திய மாநில அரசுகள் மாணவர்களை ஏமாற்றி விட்டார்கள். கோச்சிங் க்ளாஸ் செல்ல முடியாத வசதியற்ற ஏழை மாணவர்களின் கனவுகளை சிதைத்து விட்டார்கள். உரிய மதிப்பெண் பெற்று இருந்தும் மாணவர்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டுள்ளது என ஆவேசமான கருத்துக்களை சமுக வலைத் தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

American Tamils organize candle light vigil for Anitaஅனிதாவின் துயரச் செய்தி கேட்டவுடன், மத்திய மாநில் அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று சமூக வலைத் தளங்களில் குரல்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இரங்கல் செய்திகளில் டாக்டர்.அனிதா என்றே அனைவரும் குறிப்பிட்டுள்ளனர்.
உடனடியாக மெழுவர்த்தி ஏந்தி இரங்கல் கூட்டங்கள் நடத்துவது எனவும், அடுத்த வார இறுதியில் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது எனவும் ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.


அட்லாண்டா, நியூ ஜெர்சி, டெட்ராய்ட், டல்லாஸ், செயிண்ட் லூயிஸ், நெவார்க்(டெலவர்) ஆகிய நகரங்களில் இன்று சனிக்கிழமை இரங்கல் கூட்டங்கள் நடைபெறுகிறது. இன்னும் பல நகரங்களிலும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை மெழுகுவர்த்தி ஏந்தி இரங்கல் கூட்டம் நடத்த, இடம் நேரம் போன்ற ஆலோசனைகள் நடக்கிறது.
American Tamils organize candle light vigil for Anitaஇதுவரையில் உறுதி செய்யப்பட்டுள்ள இடங்களும் நேரமும்:
அட்லாண்டா - சனிக்கிழமை இரவு 7 மணி, OCEE Park, Johns Creek
டெட்ராய்ட் - சனிக்கிழமை இரவு 7 மணி , Furest Park, Novi
டல்லாஸ் - சனிக்கிழமை இரவு 7:30 மணி , Frisco Commons Park, Frisco
நியூ ஜெர்ஸி - சனிக்கிழமை மாலை 6:00 மணி, 31 Allens Road, Hightstown
டெலவர் - திங்கட்கிழமை மாலை 6:30 மணி, YMCA Glasgow Park Play Ground, செயிண்ட் லூயிஸ் - திங்கட்கிழமை மாலை 6:00 மணி, Queeny State Park, St Louis

வாஷிங்டன், சான்ஃப்ரான்சிஸ்கோ உள்ளிட்ட மற்ற ஊர்களில் இரங்கல் கூட்டம் நடைபெறும் இடம், நேரம் பற்றிய விவரங்களை இறுதி செய்து கொண்டிருக்கிறார்கள். சனி, ஞாயிறு, அல்லது திங்கட்கிழமையில் நடைபெறும். பங்கேற்க விரும்புபவர்கள் உள்ளூர் தமிழ் குழுக்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் தொடர்பு கொண்டு, விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
அனிதாவுக்கு நீதி கேட்டும் நீட் தேர்வை எதிர்த்தும், அமெரிக்காவிலும் தமிழர்களில் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
- இர தினகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக