செவ்வாய், 5 செப்டம்பர், 2017

உறுப்பு தானம் செய்ய கட்டுப்பாடுகள் தளர்வு

கோல்கட்டா: உடல் உறுப்பு தானம் செய்வதற்கான, நெருங்கிய உறவினர்கள் பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாற்று பெற்றோர், மாற்று உடன்பிறந்தோரும் நெருங்கிய உறவினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு, நாட்டில் பல கட்டுப்பாடுகள் உள்ளன. உயிருக்கு போராடும் ஒருவருக்கு தேவையான, சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை, அவருடைய நெருங்கிய உறவினர் மட்டுமே தானமாக அளிக்க முடியும். பெற்றோர், குழந்தைகள், கணவன் அல்லது மனைவி, உடன் பிறந்தோர் ஆகியோர் மட்டுமே நெருங்கிய உறவினர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர். கடந்த, 2011ல், தாத்தா, பாட்டி, பேரன், பேத்தி ஆகியோரும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இருப்பினும், பல்வேறு காரணங்களுக்காக உடல் உறுப்புகள் கிடைக்காமல், பலர் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், நெருங்கிய உறவினர் பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மாற்று பெற்றோர், மாற்று உடன்பிறந்தோரும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக