ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

எங்கே ஆரம்பித்தது நீட் ? தமிழகம் மீது போர்முழக்கம்?

அசைவ உணவைவிட சைவ உணவுதான் புனிதமானது.
8கோடி மக்கள் பேசும் தமிழைவிட, சில ஆயிரம் பார்ப்பனர்கள் அறிந்துவைத்திருக்கும் சமஸ்கிருதம்தான் புனிதமானது.
இந்த மண்ணின் மைந்தர்களான திராவிடர்களின் கறுப்பு நிறத்தைவிட, வந்தேறி ஆரியர்களின் சிவப்பு நிறம்தான் உயர்வானது.
எளிய மக்கள் வழிப்படும் மதுரைவீரன், மாடன், சுடலை முத்துமாரி போன்றவர்கள் சிறுதெய்வங்கள். பார்ப்பனர் கற்பித்த ராமன், கிருஷ்ணன் பிள்ளையார் போன்றவைதான் பெருதெய்வங்கள்!
காட்டிலிருந்த ஒரு முனிவரின் மனைவியை கற்பழித்த இந்திரனை தேவர்களின் தலைவன் என்பான். கவர்ந்துச் சென்ற சீதையை கற்போடு விட்ட ராவனனை அரக்கர்களின் தலைவன் என்பான். (அவன் எழுதிய கதைப்படியே!)
எங்கள் உணர்வோடு கலந்துவிட்ட பறை-இசை இழிவானது. கர்நாடக இசைதான் புனிதமானது.
எங்கள் பெண்களை தேவதாசிகளாக ஆக்கிவிட்டு, அவர்கள் ஆடிய சதிராட்டம் இழிவானது என்பான். அதே ஆட்டத்தின் பார்ப்பன வடிவமான 'பரத நாட்டியம்' புனிதமானது என்பான்.
பார்ப்பனர்கள் குவித்துவைத்திருந்த நிலங்களை கையகப்படுத்தி அதை உழைக்கிற மக்களுக்கு பிரித்தளித்த 'களப்பரர்களின் காலம் இருண்டகாலம்'. ஊரான் சொத்துக்களை எடுத்து பார்ப்பனர்களுக்கு காணிக்கை செய்த 'குப்தர்களின் காலம் பொற்காலம்'.
எம்.ஜி.ஆர் இந்திராவின் காலில் விழுந்துக் கெஞ்சியதால் அமைக்கப்பட்ட சர்காரியா கமிசனின் ஒன்றுக்கும் உதவாத, ஒரு வழக்குப்போடக்கூட வக்கற்ற குற்றச்சாட்டை வைத்து கலைஞரை 'விஞ்ஞான ஊழல்வாதி' என்பான். சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று உச்சநீதிமன்றமே காறித்துப்பினாலும் பார்ப்பன ஜெயலலிதாவை வீரமங்கை என்பான்.
இவற்றின் இன்றைய நீட்சி....
மருத்துவத்துறையில் இந்தியாவிலேயே சிறந்துவிளங்கும் தமிழகத்தின் பாடத்திட்டம் போதிய தரத்துடன் இல்லையாம். சுதந்திரமடைந்து 70ஆண்டுகளாக வறண்டுக்கிடக்கும் வடநாட்டை வளமாக்க வக்கற்ற சி.பி.எஸ்.சிதான் மிகுந்தத் தரமானதாம்.
-GANESH BABU

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக