ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

அனிதா கொலையோடு நீட் வென்றுவிட்டது ... கொக்கரிக்கும் பார்பனீயம்

sudhagar.pitchaimuthu :  அனிதா விசயத்தில் நடந்தது ஒரு படுகொலை.
இதெற்கெல்லாம் ஒரு சில ஆட்கள் மகிழ்ச்சி அடைய முடிகிறது என்றால் ஒரு சைக்கோ சூழ் சமூகத்தோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று மட்டும் புரிகிறது.
அனிதா எப்படி படிக்க வேண்டும், எங்கு படிக்க வேண்டும் என்று அட்வைஸ் பண்றவன் பூராவனுக்கும் ஒன்னு சொல்றேன்..
அனிதாவிற்கு சென்னை எம்.ஐ.டி யில் பொறியியல் கல்லூரியில் வாய்ப்பு கிடைத்தும் மருத்துவப் படிப்பு கனவிற்காக அவ்வாய்ப்பை உதறினார்.
பெரும்பாலான குழந்தைகள் ஓரளவிற்கு நல்ல கட் ஆப் மார்க் வைத்திருந்தா பி.இ.கிடைச்சாலும் எம்.பி.பி.எஸ் படிப்பிற்காக வாய்ப்பை உதறிவிட்டு காத்திருப்பார்கள்.
ஆனால் அனிதாவின் சூழலே வேறு. அவரது குடும்பத்தில் அவரே முதல் தலைமுறை பட்டதாரி. அவருக்கு கிடைத்த வாய்ப்பு அவரது ஒட்டு மொத்த தலைமுறைக்குமான வாய்ப்பு. அதனையே உதறிவிட்டு மருத்துவ படிப்பிற்கு காத்திருந்தார் என்றால் அந்த குழந்தையின் கனவை புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் ஒரு மருத்துவரை கொல்லவில்லை, தன் உரிமைக்காக போராடிய ஒரு போராளியைக் கொன்று இருக்கிறோம். அனிதா போன்றவர்கள் இம்மண்ணில் வாழ்ந்து சமூக நீதிக்காக போராடியிருக்க வேண்டும்.

எதிர் வரும் காலத்தில் நாம் திறமை மிகு மருத்துவர்களை உருவாக்க முடியும். ஆனால் சின்ன வயதில் தன்னைப் போன்றவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்று நீதி மன்றம் வரை துணிச்சலுடன் போராடிய பெண் போராளிகளை இனி நம்மால் உருவாக்க இயலுமா எனத் தெரியவில்லை.
ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் என எல்லோரும் கல்வி பயில்வதற்கான சமூக நீதி தருவதில் இந்தியாவிலேயே முதலிடம் தமிழகம் தான். ஆனால், இந்த மண்ணில்தான் நாம் நம் குழந்தையினை தொலைத்து விட்டு நிற்கிறோம்.
பெரியார் என் காலத்தில் இல்லையே என முதன் முதலாக‌ வேதனைப்படுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக